அடுத்தடுத்து என்கவுண்டர் – மாவுகட்டு அதிர வைக்கும் போலீஸ் ! அச்சத்தில் ரவுடிகள் !
தொடரும் என்கவுண்டர், மாவு கட்டு அதிர வைக்கும் போலீஸ், அச்சத்தில் ரவுடிகள், தென் சென்னையில் A+ ரவுடிகளான
கோச் குமரன் , பப்ளு சண்முகம் ஆகியோரின் கைகளுக்கு மாவு கட்டு திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைச்சாமி என்கவுண்டரில் சுட்டு கொலை இந்த வரிசையில் இன்று ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தொடர்புடைய ஒரு ரவுடி என்கவுண்டரில் சுடப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும், , 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த 11 பேரில் திருவேங்கடமும் ஒருவர். திருவேங்கடன் ஆட்டோ டிரைவர் வேடத்தில் ஆம்ஸ்ட்ராங் வீடு அருகே கடந்த பத்து நாட்களாக நோட்டம் விட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வகையில், போலீசார் இவரிடம் விசாரணை நடத்த இன்று 14.07.2024 காலை 5.30 மணி அளவில் மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்து சென்றுள்ளனர். அப்போது, புழல் அருகே இருக்க கூடிய வெஜிட்டேரியன் வில்லேஜ் என்ற பகுதியை அடைந்தவுடன் தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
திருவேங்கடம். தப்பி செல்ல முயன்ற திருவேங்கடத்தை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் இரண்டு முறை சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்டதில், திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது குறித்து போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கையில், திருவேங்கடம் புழல் பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
இதனால், ஆயுதங்களை பறிமுதல் செய்ய சென்ற போது திடீரென அங்கே பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் நோக்கி சுட்டதாகவும், தற்காப்புக்காக காவல்துறையினர் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கி உட்பட சில ஆயுதங்களை போலீசார் அவரிடமிருந்து பறிமுதல் செய்தள்ளனர் .ஏற்கெனவே இவருக்கு போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடம் பின்னணி குறித்து காவல்துறை தகவல்:
என்கவுன்டர் செய்யப்பட்ட திருவேங்கடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் A-3 குற்றவாளி இடது மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் 2 ரவுண்ட் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர் பாம் சரவணன் சகோதரர் தென்னரசு கொலை வழக்கில் முதல் குற்றவாளி. 2014 ஆம் ஆண்டு குன்றத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை உள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டு, நேரடியாக கத்தியால் வெட்டிய குற்றவாளி இவர் இவர் மீது வழிப்பறி மற்றும் அடிதடி கொலை முயற்சி வழக்குகள் என 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
போலீஸ் காவலில் இருந்து தப்பி காவல் ஆய்வாளரை தாக்கி விட்டு தப்ப முயன்ற போது இன்று காலை 5.30 மணிக்கு என்கவுன்டரில் சுடப்பட்டார் ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்திலிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
சம்பவ இடத்தில் காவல்துறை ஆய்வு நடத்தி வரும் நிலையில் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்டவை பறிமுதல். செய்யப்பட்டுள்ளது போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக சில தினங்களுக்கு முன் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைச்சாமி என்பவர் கூட்டாளிகளுடன் வனப்பகுதியில் பதுங்கி இருந்த போது கைது செய்ய சென்ற ஆலங்குடி காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கத்தை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதோடு கத்தியால் வெட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் சுட்டதில் அந்த இடத்திலே பிரபல ரவுடி துரை உயிரிழந்தார்.
நேற்று முன்தினம் தென் சென்னையில் உள்ள A+ ரவுடிகளான கோச் குமரன் , பப்ளு சண்முகம் ஆகியோரின் கைகளுக்கு மாவு கட்டு போட்டுள்ளனர் காவல்துறையினர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேரில் ஒருவர் என்கவுண்டரில் சுட்டு கொள்ளப்பட்டதால் அதிர்ச்சியில் உறைந்த ரவுடிகள் தமிழ்நாட்டை விட்டு பக்கத்து மாநிலங்களுக்கு தஞ்சம் அடைய ஓட்டம் பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
– மணிகண்டன்