‘ரஜாக்கர்’ தெலுங்கு சினிமா! மறைக்கப்பட்ட உண்மையா? மதக்கலவர அபாயமா?

0

‘ரஜாக்கர்’ தெலுங்கு சினிமா! மறைக்கப்பட்ட உண்மையா? மதக்கலவர அபாயமா? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள, பத்திரிகை , ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.

நடிகை வேதிகா
நடிகை வேதிகா

இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி பேசும் போது “வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான,  ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை என நினைக்கிறேன். இப்போதைய  ஹைதராபாத் 1948ல் இந்தியாவில் சேர்க்கப்படுவதற்கு முன், முஸ்லீம் நிஜாம் மன்னரால் துர்க்கிஸ்தானாக மாற்றப்படுவதாக இருந்தது. இந்திய அரசால் அது தடுக்கப்பட்டது. எங்கள் வம்சத்தில் என் தாத்தா போராடி மக்களை மீட்ட கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் அந்தப்போராட்டத்தில் தான் உயிர் நீத்தார். இந்தக்கதை ஹைதராபாத் மக்கள் மீது கட்டவிழ்த்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தை, அதிலிருந்து ஹைதராபாத் மீண்டு வந்த கதை பதிவாகியுள்ளது. இதை எப்படியாவது திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது.  இக்கதையை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி”.

நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது “வாழ்த்த வந்த அனைவருக்கும் முதலில் நன்றி. முதலில் இந்தக் கதை கேட்ட போது,  எனக்கே சரியாக புரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு, எனக்கே தெரியாமல் இருந்தது. இந்த உண்மை பற்றி தேடித் தெரிந்துகொண்டேன். உடனே கண்டிப்பாக இந்தப் படம் செய்கிறேன் என்றேன். உலகத்திற்கு இந்த கதை தெரிய வேண்டும். குடூர் நாராயண ரெட்டி சாருக்கு என் நன்றி”.

- Advertisement -

- Advertisement -

இயக்குநர் யதா சத்யநாராயண “தமிழ் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். மணிரத்னம் சார் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். சுஹாசினி மேடத்திடம் இந்தக் கதையை போனில் சொன்னேன், அவர் என்னைப் பாராட்டினார். இப்படத்திற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னார், அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முழுப் பாத்திரமாக மாறிய பாபிக்கு என் நன்றி. கோலிவுட் தென்னிந்தியாவுக்கு தாய் மாதிரி. ரஜாக்கர்  மூலம் அறிமுகமாகும் என்னை இங்கு ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் மக்களுக்கு, ஒரு படம் பிடித்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இப்படம் உங்களுக்குப் பிடிக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

நடிகை வேதிகா பேசியதாவது “வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஹைதராபாத் மாநிலத்திற்கு 1948 ல் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் அது பலருக்கு தெரியாது. அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை. வரலாற்றுப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்றார்.

4 bismi svs

இசையமைப்பாளர் பீம்ஸ்  “என் தாத்தா குடூர் நாராயண ரெட்டி வரலாற்றைக் கூறியிருக்கிறார். இந்தப்படத்தின் மூலம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு சிறப்பான படைப்பில் நானும் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி.”

ரஜாக்கர்
ரஜாக்கர்

ஒளிப்பதிவாளர் குசேந்தர் ரமேஷ் ரெட்டி பேசியதாவது…  எங்கள் படத்திற்கு ஆதரவு தர வந்துள்ள அனைவருக்கும் நன்றி. ரஸாக்கர் எனக்கு மிக முக்கியமான படம்.  நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவன், ஆனால் எனக்கே இந்தக்கதை அவ்வளவாகத் தெரியாது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1 வருடம் கழித்தே ஹைதராபாத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த வரலாறு தெரியாததற்கு நான் வருத்தப்படுகிறேன்” என்றார்.

நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது, “தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம்” .

நடன இயக்குநர் ஷெரீஃப் பேசியதாவது,” பாபி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எது செய்தாலும் என் ஆதரவு உண்டு. மறைக்கப்பட்ட வரலாற்றை இந்தக் கதை சொல்கிறது. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். இந்தப் படம் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்.”

நடிகர் ஜான் விஜய் பேசியதாவது, “ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் என் நன்றிகள். என்னை இந்த படத்தில் நடிக்க வைத்ததற்கு சிறப்பு நன்றி. பாபி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எப்போது பாபியை பார்த்தாலும் மிக நட்போடு பழகுவார். இப்படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி” என்றார்.

நடன இயக்குநர், நடிகர்  ராம்ஜி பேசியதாவது, “இந்த படத்தில் சின்ன ரோல் தான் ஆனால் பவர்ஃபுல் ரோல் செய்துள்ளேன். இந்த படத்தில் நடிக்க காரணமான சங்கர் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. வரலாற்றில் மறைக்கப்பட்டதை ஒவ்வொரு இந்தியனுக்கும் எடுத்துச் செல்லும் படமாக இப்படம் இருக்கும். இது தான் உண்மையான பான் இந்தியன் மூவி. உங்கள் ஆதரவை தாருங்கள் அனைவருக்கும் நன்றி”. ரஜாக்கர் படத்தின் டிரெய்லரைப் பார்த்தாலே நம்ம மனசுக்கு சரியாப்படல. படம் ரிலீஸ் ஆகட்டும். அப்புறம் தெரியும் சங்கதிகளும் சதிகளும்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.