அங்குசம் சேனலில் இணைய

‘கதையை நம்பாமல் கத்தியை நம்புகிறார்கள்” – எஸ்.ஏ.சி.ஆதங்கம்!

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ்’ கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்கும்  படம் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’.

ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர்,. மேலும்,  வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, சௌந்தர்ராஜா,  கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார் நடிக்கிறார்..

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

'ராம் அப்துல்லா ஆண்டனி'வரும் அக்-31ஆம் தேதி படம் வெளியாவதால் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அக்டோபர் 09- ஆம் தேதி சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது..

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகரன், அகத்தியன், பேரரசு, பொன்ராம், எஸ்.ஆர் பிரபாகரன், தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் உதயா, கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.எஸ்.ஏ சந்திரசேகரன்  படத்தின் இசைத்தட்டை வெளியிட்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

நிகழ்ச்சியில் பேசிய சிலர்….

*இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்*

“இப்போ ட்ரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுக்கலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லை என்றால் இப்படி புதிய பசங்களை வைத்து படம் பண்ண வேண்டும். இதற்கு நடுவில் உள்ளவர்களை வைத்து யாராவது படம் பண்ணினால் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தால் அதற்கு பைனான்ஸ் பண்ணுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல கதையை வைத்து படம் எடுப்பதற்கு இங்கே யாரும் பைனான்ஸ் பண்ண ஆட்கள் தயாராக இல்லை.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்

ஒரு புதிய இயக்குநரை நம்பி இரண்டரை கோடி பணம் போட்டு இப்படத்தை எடுத்திருக்கிறார் என்றால் அந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அந்த நம்பிக்கை ஜெயிக்கணும். ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது நாம் ஜெயிப்போம் என நினைத்து ஆரம்பித்தால், கண்டிப்பாக ஜெயிப்போம். என் வாழ்க்கை அதுதான். இப்போது வரை நான் ஜெயிப்பேன் என்று தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கை உள்ளவன் தான் ஜெயிப்பான். இந்த படம் வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைய தலைமுறை வன்முறையைத்தான் ரசிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர்கள் எல்லாம் கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்களே தவிர கதை எதுவும் கிடையாது. ஒரு எழுத்தாளர் தான் நாட்டிலே ஒரு எழுச்சியை உண்டாக்க முடியும்”.

இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன்

“சினிமா ஆர்வம் உடையவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதும். மற்றதெல்லாம் தானாக நடந்து விடும். அதற்கு ஜெயவேல் நல்ல உதாரணம்”.

இயக்குநர் ஜெயவேல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

“இந்த இடத்தில் நான் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் தான்.பல தடங்கல்களுக்கு இடையே இந்த படம் வளர்ந்தது. ஆனால் அது பற்றி சொல்ல வேண்டிய இடம் இது இல்லை. அதற்கெல்லாம் படத்தின் வெற்றி மூலம் தான் பதில் சொல்ல முடியும்.ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன் என்று திருப்தி இருக்கிறது”.

ராம் அப்துல்லா ஆண்டனிதொழில் நுட்பக் குழு

எழுத்து, இயக்கம் – த.ஜெயவேல்

ஒளிப்பதிவு –   எல்.கே.விஜய்,

இசை: டி.ஆர்.கிருஷ்ண சேத்தன்

எடிட்டர் – வினோத் சிவகுமார்

கலை –  சீனு&  எஸ்.இரளி மும்பை

பாடல்கள் – சினேகன், டி.ஜெயவேல்

ஸ்டண்ட் – சுரேஷ்

நடன இயக்குனர் – தீனா, ராதிகா

பி.ஆர்.ஓ.:  ஜான்சன்

 

  —   ஜெடிஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.