செம்மையா சாரை பாம்பு குழம்பு ! சிறையில் ராஜேஷ்குமார் .!
செம்மையா சாரை பாம்பு குழம்பு ! சிறையில் ராஜேஷ்குமார் .! திருப்பத்தூர் அருகே அதுக்காக
சாரைப்பாம்பை ,செமையா சமைத்து பயங்கரமா ருசித்து சந்தோஷ்மாக இருந்த ராஜேஷ்குமாரை கைது செய்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு குணசேகரன் மகன் ராஜேஷ்குமார் என்ற வாலிபர் தோல் உரிக்கப்பட்ட பாம்பு ஒன்றை குடல் நீக்கிய பிறகு தண்ணீரில் போட்டு சுத்தப்படுத்துகிறார் அங்கு வரும் அவரது மனைவி, `ஏய்ய்…. இன்னா …இது. த்தூ …. 100 ரூபாய்க்கு கறி எடுத்துக்கிட்டு வரவேண்டியது தானே வேறு எங்கையாவது எடுத்துட்டு’ என்கிறார்.
அதற்கு ராஜேஷ்குமாரோ, உனக்கென்ன, நான் திங்குறேன். நீ போய் ஒரு கடாய், ஒரு கரன்டி எடுத்துக்கிட்டு வா.. என்கிறார். பின்னர் சாரைப்பாம்பை செமையா சமைத்து பயங்கரமா ருசித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட அது வனத்துறை வரை சென்றது.
இது தொடர்பாக, வழக்குப் பதிந்த திருப்பத்தூர் வனத்துறையினர் பாம்பை குழம்பு செய்து சாப்பிட்ட ராஜேஷ்குமாரை வீட்டிற்கு சென்று தூக்கி வந்து நன்கு வறுத்து எடுத்து பின்னர் கைது செய்து, சிறையிலடைத்துள்ளனர்.
ராஜேஷ்குமார் சொன்ன காரணம்
எதற்காக சாரைப்பாம்பை சமைத்த எனக்கேட்ட அதிகாரிகளிடம், அப்படி சாப்பிட்டால் உடல் நல்ல புஷ்டியாகம் , ஆண்மை அதிகரிக்கும்னு சொன்னாங்க. அதனால் அவ்வபோது சாரைப்பாம்பை தேடிப்பிடிச்சி அடிச்சி சமைத்து சாப்பிட்டு வருவேன் என்றதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் சாரைப்பாம்பை சமைத்து ஒரு பிடி பிடித்த ராஜேஷ்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் கோட்ட மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கூறுகையில்
பாம்பை அடித்துக்கொல்வது சட்டப்படி குற்றமாகும். காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின்படி பாம்புகளை கொல்வது தவறு என்றும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகிறார் மேலும். காட்டூயிர் பாதுகாப்பு சட்டம், 1972-இல் அட்டவணை 1, பிரிவு சி-யின் கீழ் பாம்புகள் வருகின்றன. யானை, புலிகள் கூட இந்த பிரிவின் கீழ் தான் வருகின்றன. எனவே பாம்பை கொல்வது, உணவுக்காக வேட்டையாடுவது, தோலுக்காக வேட்டையாடுவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த குற்றத்திற்காக சுமார் 3 முதல் 7 , ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராததும் விதிக்கப்படலாம் என்றார்
– மணிகண்டன்