ரீ ரிலீஸ் சக்ஸஸ் மீட்! கோலிவுட்டை கதறவிட்ட கலைப்புலி!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆகி ஹிட் அடித்த படங்களை ரீ ரிலீஸ் பண்ணி இப்பவும் ஹிட்டாக்குவது தான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டிரெண்ட். இந்த வரிசையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ரிலீஸ் ஆன விஜய்யின் ‘சச்சின்’ படத்திற்கு இப்போது டிரெய்லர் ரிலீஸ் பண்ணி, அதன் பிறகு படத்தையும் இந்த ஏப்ரல் 18- ஆம் தேதி ரிலீஸ் பண்ணி, அதற்கு சக்சஸ் மீட் டையும் நடத்தி கதிகலங்க வைத்துள்ளார் ‘சச்சின்’ தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. 350 தியேட்டர்களில்’சச்சின்’ ரீ ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றதைக்

கொண்டாடும் விதமாக  சக்சஸ் மீட் & பிரஸ்மீட்  ஏப்ரல் 26-ஆம் தேதி சென்னையில் நடந்தது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

முதலில் பேசிய டான்ஸ் மாஸ்டர் *ஷோபி*

” ‘சச்சின்’ ரீ ரிலீஸ் சக்சஸ் மீட்டில் கலந்து கொள்வது ஒரு புது அனுபவமாக உள்ளது. அப்போதைய ரசிகர்களைப் போல 20 வருடங்களுக்குப் பிறகு இன்றைய தலைமுறையினரும் அந்த பாடல்களை கொண்டாடுவது,  மகிழ்ச்சியாக உள்ளது. தயாரிப்பாளர் தாணு அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் ஜான் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் ஜீவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோருடன் முதல் முறையாக இணைந்து பணியாற்றியது மலரும் நினைவுகளாக உள்ளது. தயாரிப்பாளர் தாணு  விஜயின் , ‘துப்பாக்கி, ‘தெறி’ படங்களையும் ரீ ரிலீஸ் பண்ணி ஹிட் அடிக்க வேண்டும்” என்றார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

அடுத்து இயக்குனர்…

ரீ ரிலீஸ் *ஜான் மகேந்திரன்*

“சச்சின் படம் மீண்டும் வெளியாகியுள்ளதைப் போன்றே எனக்கு தோன்றவில்லை. புதுப்படம் வெளியானதை போன்றே உள்ளது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் என அடுத்தடுத்த அப்டேட்டுகளை புதுப்படத்திற்கு விளம்பரப்படுத்துவது போல ஏற்பாடுகள் செய்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவைத்துவிட்டார்” என்றார்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

*’கலைப்புலி’ எஸ்.தாணு*

” ‘தம்பி விஜய் திருப்பாச்சி, மதுர போன்ற அதிரடி படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, ஒரு மாற்றத்திற்காக  இயக்குனர் ஜான் மகேந்திரன் பற்றி கூறினேன். அவர் என்னிடம் குஷி போன்ற கதை ஒன்றை கூறினார். நீங்கள் கேட்கிறீர்களா?என்று கேட்டேன். அதன் பிறகு இயக்குனர் ஜான் மகேந்திரன்  விஜய்யிடம் கதை  கூற ஏற்பாடு செய்தேன். ஒன்றறை மணி நேரத்திற்கு பிறகு தம்பி விஜய்யிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. ‘கதை மிகவும் பிடித்திருக்கிறது, கண்டிப்பா பண்ணலாம்னு சொன்னார்.

ரீ ரிலீஸ் 2005-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட்டேன். திரைப்படத்தை வாங்கிய அனைத்து விநியோகஸ்தர்களும் நல்ல வசூல் சாதனை செய்ததாக கூறினார்கள். இப்பொழுது விளம்பரப்படுத்துதலின் செலவு குறைந்திருப்பதாலும், டிஜிட்டல் ஊடக விளம்பரங்கள் மூலம் ரசிகர்களை எளிதாக சென்றடைவதன் மூலம் ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி, மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள். ‘சச்சின்’ திரைப்படம் மீண்டும் வெற்றியடைய திரையரங்கு உரிமையாளர்களும் மிகப்பெரிய காரணம். மேலும் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து, மிகப்பெரிய வெற்றியடைய செய்த ஊடக நண்பர்களுக்கு மிக்க நன்றி” என்றார் உருக்கமுடன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கடைசியில் பேசிய மியூசிக் டைரக்டர் *தேவி ஸ்ரீ பிரசாத்*

“என் வாழ்க்கையை நான் இசையோடு தான் கொண்டாடுவேன். நான் எங்கு சென்றாலும் என்னிடம் எல்லோரும் சொல்வது ‘சச்சின்’ படத்தின் பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கிறது என்று தான் இன்று வரையிலும் சொல்வார்கள்.என் இசைப் பயணத்தில் ‘சச்சின்’ படம் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் தாணு சார் அவர்களுக்கு நன்றி” என சுருக்கமாக முடித்தார்.

 

—   மதுரை மாறன்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.