அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கருப்பட்டி ரவா லட்டு! சமையல் குறிப்பு-52

திருச்சியில் அடகு நகையை விற்க

வணக்கம் சமையலறை தோழிகளே! இன்னைக்கு நாம பாக்க போற ரெசிபி கருப்பட்டியை வைத்து சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு கருப்பட்டி ரவா லட்டு தாங்க. வாங்க எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

1/2கப் வறுத்த வெள்ளை ரவை,1/2 கப் கருப்பட்டி, 2 ஏலக்காய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், 1/4கப் பச்சரிசி,2 டேபிள் ஸ்பூன் நெய், 10 முந்திரி.

செய்முறை:-

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.1/2 கப் கருப்பட்டி, நல்ல தித்திப்பான இனிப்பு கொடுக்கும். வறுத்த ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்து ஆற வைத்து மிக்சி ஜாருக்கு மாற்றி 2பல்ஸ் விட்டு எடுத்துக் கொள்ளவும்.கடாயில் நெய் விட்டு முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து, அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து லேசாக கிளறி விட்டு அரைத்த ரவை மற்றும் இடித்த ஏலக்காய் சேர்த்து 2நிமிடங்களுக்கு கிளறி தனியே வைக்கவும்.அடுப்பில் பாத்திரம் வைத்து, கருப்பட்டி சேர்த்து அதனுடன் 2டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டு கரைந்ததும், வடிகட்டி ரவை கலவையில் சேர்க்கவும். இனி, 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். ரவை கலவை கெட்டியாகும். தண்ணீர் அதிகமாக சேர்த்து கருப்பட்டி கரைத்தால் கெட்டிப்படுவதற்கு நேரம் ஆகும்.

கருப்பட்டி ரவா லட்டு
  கருப்பட்டி ரவா லட்டு

வெறும் வாணலியில் அரிசி சேர்த்து பொன்னிறமாக வறுத்து,ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்ததை, கெட்டியான ரவையில் சேர்த்து நன்றாக கலந்து, உருண்டைகள் பிடித்து பரிமாறலாம். சுவையான, கருப்பட்டி ரவா லட்டு ரெடி.

 

  -பா. பத்மாவதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.