அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தீயில் கருகிய 337 கிலோ கஞ்சா போதை பொருட்கள் !

திருச்சியில் அடகு நகையை விற்க

தமிழக முதலமைச்சர் அவர்களின் “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு”-யை (Drug Free Tamil Nadu) உருவாக்கும் சீரிய நோக்கில் தமிழகம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை வகுத்து தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகரத்தில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப., போதை பொருளான கஞ்சாவை முழுமையாக கட்டுப்படுத்த திருச்சி மாநகர காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.

போதைபொருட்கள் ஏரிப்புஅதன்படி, திருச்சி மாநகரத்தில் உள்ள இ.புதூர், அமர்வு நீதிமன்றம், கோட்டை, காந்திமார்க்கெட், பாலக்கரை, தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை ஆகிய 8 காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW) ஆகிய காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 204 கஞ்சா வழக்குகளில், எதிரிகளிடமிருந்து சுமார் 336.596 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கமிஷனர் காமினி

மாண்பமை நீதிமன்றம் உத்தரவுப்படியும், திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, இ.கா.ப.,  அறிவுறுத்தலின்படி, 204 கஞ்சா வழக்கின் எதிரிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை இன்று 19.11.2025-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி கிராமத்தில் உள்ள மருத்துவக் கழிவுகளைப் பாதுகாக்கும் மற்றும் அகற்றும் தனியார் நிறுவனத்தில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்(வடக்கு) மற்றும் உயர்மட்ட போதை பொருள் ஒழிப்பு கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (PCB) வகுத்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றியும் பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.