அங்குசம் சேனலில் இணைய

2,253 வார்த்தைகளைக் கொண்ட பெயரால் உலக சாதனை !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நம் ஊர்களில் எல்லாம் பெயர் கொஞ்சம் பெரியதாக இருந்தாலே அதை நினைவு வைத்து கூப்பிடுவது மிகவும் கடினம். ஆனால் இங்கு ஒருத்தர் 2253 வார்த்தைகள் கொண்ட பெயரை வைத்திருக்கிறார், கேட்கும்போதே நமக்கு தலை சுற்றுகிறது அல்லவா? அப்போது எனக்கு இருப்பது போல் அவருக்கு மறதி நண்பர்கள் இருந்தால் அவர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். ஆம் இந்த பெயருக்கு சொந்தக்காரர் 1990 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் பிறந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர், இவர் தனது பெயரில் 2,253 வார்த்தைகளைச் சேர்த்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

லாரன்ஸ் வாட்கின்ஸ்
லாரன்ஸ் வாட்கின்ஸ்

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

பொதுவாக நம்  இந்தியாவை என்று எடுத்துக்கொண்டால் தந்தையின் பெயருடன், குழந்தையின் பெயர் இணைந்திருக்கும். அரபு நாட்டில் தந்தை, குடும்பம் போன்றவற்றைச் சொல்லும் வகையில் பெயர் அமைக்கப்படுகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இதேபோல மரபுகள் இருக்கும். ஆனால் இவர் 2,253 சொற்கள் கொண்ட நீண்ட பெயரைச் சட்டபூர்வமாகக் கொண்டவராக உள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

2,253 சொற்கள் கொண்ட நீண்ட
2,253 சொற்கள் கொண்ட நீண்ட பெயர்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இது குறித்து லாரன்ஸ் கூறுகையில், “பலருக்கும் சாதனைகள் மீது ஆர்வம் இருக்கும். முடிந்த சாதனைகளைச் சிலர் முயற்சி செய்வார்கள், நானும் என் பெயரில் சாதனை செய்த முடிவு செய்தேன். குடியரசு நீதிமன்றம் முதலில் என் மனுவை ஏற்றுக்கொண்டது. ஆனால் பதிவு அலுவலகம் மறுத்ததால், உயர் நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்றேன். நான் வேலை பார்த்த நூலகத்தில் இருந்து புத்தகங்கள் வாயிலாக பெயர்களைத் தேர்ந்தெடுத்தேன். சக நண்பர்கள் பரிந்துரைத்த பெயர்களையும் சேர்த்தேன்” என்று கூறியிருக்கிறார்.

இதில் சுவாரசியம் என்னவென்றால் இவரது புதிய பெயரை அரசு அடையாள ஆவணங்களில் பதிவு செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளதையடுத்து, பெயர் பதிவு தொடர்பான நியூஸிலாந்து நாட்டில் இரண்டு சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  —   மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.