மூன்றில் ஒரு பங்கு காலி பணியிடம் ! பதிவுத்துறை அவலம் ! ஷாக் ரிப்போர்ட்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் இல்லாமல், பதிவுத்துறை இயங்கிவருவதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து பெற்ற அதிகாரப்பூர்வ அறிக்கையிலிருந்து இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தமிழகத்தில் நிர்வாக ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 38. ஆனால், பதிவுத்துறையை பொறுத்தமட்டில் தங்களது நிர்வாக வசதிகளுக்காக 11 மண்டலங்களாகவும் 58 மாவட்டங்களுமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆக மொத்தம் 582 சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

2026 அக்டோபர் 1 ஆம் தேதி நிலவரப்படி பதிவுத்துறையில் மொத்தம் 5,008 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 3,194 பணியிடங்களில் மட்டுமே ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மீதமுள்ள 1,814 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதில் கொடுமையே, சார்பதிவாளர் அலுவலகத்தில் பிரதான பணி சார்பதிவாளரை சார்ந்தே அமைந்திருக்கிறது. அப்படி இருக்கையில், அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த சார்பதிவாளர் பணியிடங்களே 154 காலியாக கிடக்கிறது. இன்னும் உச்சக்கட்ட கொடுமை 67 மாவட்ட பதிவாளர் பணியிடங்களும் காலியாக கிடப்பது. அதாவது, தமிழகம் முழுவதும் 120 மாவட்ட பதிவாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 67 பணியிடங்கள் காலி என்பதன் பொருள், சரிபாதிக்கும் மேல் காலியாகி கிடக்கிறது என்பதுதானே?

அதேபோல, அலுவலக உதவியாளர் – 491;  காவலர் – 385;  உதவியாளர் – 230;  பதிவறை எழுத்தர் – 185;  இளநிலை உதவியாளர் – 144; பைண்டர் – 41; தட்டச்சர் – 23 ஆகிய பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தொகுப்பாக, 5008 பேர் பணியாற்ற வேண்டிய துறையில், 3194 பேர்தான் பணியாற்றி வருகிறார்கள். 1814 பணியிடங்கள் காலியாகக்கிடக்கிறது என்பதிலிருந்து ஒப்பிட்டு பார்க்கையில், காலி பணியிடங்களின் சதவிகிதம் 36.2% ஆக இருக்கிறது. அதாவது மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் இல்லை.

அரசுக்கு நிலையான வருவாயை ஈட்டித்தருவதோடு; எப்போதும் சர்ச்சைகளோடு புழங்கும் பதிவுத்துறையிலேயே இப்படி ஒரு நிலையா? என்ற கேள்விதான் தற்போது தமிழகத்தில் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் விவகாரமாக மாறியிருக்கிறது.

—      அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.