கும்பகோணத்தில் பேராசிரியர் உ.பிரபாகரன் எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா !
கும்பகோணத்தில் பேராசிரியர் உ.பிரபாகரன் எழுதிய ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா – சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் சிறப்புரை – தமிழர் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
கும்பகோணம் தமிழாய்வு அறக்கட்டளையும், சென்னை தமிழக கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனமும், விருதுநகர் சிறகுகள் நல அறக்கட்டளையும் இணைந்து ஐம்பெரும் நூல்கள் வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா கும்பகோணம் நால்ரோடு லீ கார்டன் அரங்கில் 16.03.2025ஆம் நாள் நடைபெற்றது.
இவ்விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், அயல்நாட்டு தமிழ் கல்வித் துறையின் தலைவராக, பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் உ.பிரபாகரன் அவர்கள் எழுதிய 1. பெரியார் ஈ.வெ.ரா.வின் கல்வியியல் சிந்தனைகள், தந்தை பெரியாரின் மொழி, இலக்கியச் சிந்தனைகள், 3. பாவேந்தர் பாரதிதாசனின் குமுகாயச் சிந்தனைகள், 4. ஆய்வாளர்கள் பார்வையில் அண்ணல் அம்பேத்கர், 5. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் தமிழ்க்கொடை என்னும் ஐந்து அருமையான நூல்கள் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும், குடந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவருமான சாக்கோட்டை க.அன்பழகன் தலைமை ஏற்று நூல்களையும் வெளியிட்டு, சான்றோர்களுக்கும் விருது வழங்கி பாராட்டி உரையாற்றினார். முனைவர் பி.இரத்தினசபாபதி ஆய்வாளர்கள் பார்வையில் அண்ணல் அம்பேத்கர் நூலினை மதிப்பீடு செய்து உரையாற்றினார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் டாக்டர் துரை.சந்திரசேகரன் பெரியார் ஈ.வெ.ரா.வின் கல்வியியல் சிந்தனைகள் நூல் குறித்து உரையாற்றினார்.
சட்டமன்ற உறுப்பினர் க.சோ.கண்ணன் பாரதிதாசனின் குமுகாயச் சிந்தனைகள் என்னும் நூல் குறித்து உரையாற்றினார். இவ்விழாவில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி டிபிஎம்எல் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் அரச.முருகுபாண்டியன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் அருள்நாயகம், கவிஞர் செ.ஆடலரசன் ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.
விழாவில் நோக்கவுரையை தமிழாய்வு அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர் முனைவர் உ.பிரபாகரன் வழங்கினார். தொடர்ந்து பேராசிரியர்கள் சே.கோச்சடை, பா.வீரப்பன், அரங்க சுப்பையா, அ.கார்த்திகேயன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தமிழ்நாடு இயக்குநர் டாக்டர் சா.இரவிவர்மன், சி.மானிக்கம், கோ.மோகன், தசநாதன், சோழபுரம் அறிவழகன், சிம்சன், சி.காமராசு நீலமேகம், சின்னை பாண்டியன், எம்.முகமது யூனுஸ், டாக்டர் அ.முகமது பர்ஃஹான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவில் முனைவர் பி.இரத்தினசபாபதி, அரங்க சுப்பையா, செ.அரசாங்கம், டாக்கடர் கண்ணையன், இரா.அருள்நாயகம், டாக்டர் ம.சேதுராமன், ஆடிட்டர் சு.சண்முகம், ஆடிட்டர் க.சௌந்தரராஜன்க, அ.முஹமது அக்பர், ந.பன்னீர்செல்வம், முனைவர் சி.மனோகரன், திருமதி கி.சந்தானலெட்சுமி, திருமதி இரா.பூமா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவிற்கு கனரா வங்கி மேலாளர் தியாகராஜன் அவர்களும், மாருதி ஜாப் சென்டர் உரிமையாளர் சே.துரைசாமி அவர்களும் முன்னிலை வகித்தார்கள். ஆடுதுறை DIET முதல்வர் டாக்டர் அ.ஜெயராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இவ்விழாவில் குடந்தைத் தமிழ்ச்சங்க செயலாளர் தேசிய நல்லாசிரியர் கா.பன்னீர்செல்வம் உள்ளிட்ட, பெருந்திரளான பேராசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழா முடிவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ரெ.பெரியசாமி நன்றியுரை வழங்கினார்.
-சிறப்பு செய்தியாளர்