இந்து தமிழ் நாளிதழ் தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்
இந்து தமிழ் நாளிதழ் தலைமை நிருபர் கல்யாணசுந்தரம் உயிரிழந்தார்
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவைச் சேர்ந்த சதாசிவம்- ஜெயலட்சுமி தம்பதியரின் 2-வது மகன் எஸ்.கல்யாணசுந்தரம்(வயது 50).
மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் செய்தியாளராக பணிபுரிந்து, பின்னர் திருச்சி மாவட்டத்தில் தினமணி மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ்களில் தலைமை நிருபராக பணிபுரிந்தார்.
பத்திரிகை துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தவர். தனது பணி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் பாசனம் மற்றும் விவசாயம் தொடர்பான முக்கிய செய்திகளை வெளியிட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்தவர்.
தற்போது இந்து தமிழ் திசை திருச்சி பதிப்பில் தலைமை நிருபராக பணியாற்றி வந்த நிலையில், சனிக்கிழமை(09-11-2024) இரவு 10:30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சாலை அண்ணா நகர் முல்லை தெருவில் உள்ள அவர்களது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை திங்கள் கிழமை(11-11-2024) காலை காலை 10 மணிக்கு மேல் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.
தொடர்பு எண்: 7010288578