திருச்சி ரெங்கா நகரில் 75வது குடியரசு தின விழா மற்றும் பாலம் திறப்பு விழா !
திருச்சி ரெங்கா நகரில் 75வது குடியரசு தின விழா மற்றும் பாலம் திறப்பு விழா
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் 25வது வார்டில் சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் சிறிய நகர் தான் ரெங்கா நகர். இந்த குடியிருப்பு பகுதியிலுள்ள குடிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களின் பங்கு மறுக்க முடியாதது. இப்பகுதியில் குடிமை வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு உதவுவது மட்டுமல்லாமல், குடிமக்கள் மத்தியில் அவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்துகிறது . அரசு பணி மற்றும் தனியார் நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் சிறு தொழில்முனைவோர்கள் கொண்ட இந்த நகர் தூய்மை நகராகவும் உள்ளது. நகர் மக்களின் குறைகளை தேவைகளை அரசு துறைகளுக்கு எடுத்து சென்று தீர்வு காண்பதற்கு ஒரு பாலமாக செயல் பட்டு வருகிறது.
இங்குள்ள ரெங்கா நகர் குடியிருப்போர் நலச்சங்கம். நகர் தூய்மையாகவும் தெருவிளக்குகள் மற்றும் சாலைகள் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருவதற்கு காரணம் இந்த நலச்சங்கத்தின் செயல்பாடுகள்தான். மாநகராட்சியுடனும் மின்சார துறையுடனும், மாமன்ற உறுப்பினருடனும் சுமுக்கமான நல்லிணக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் 75வது குடியரசு தினவிழா சிறப்பாக நலச்சங்க வளாகத்தில் கொண்டாடப்பட்டது. நலச்சங்கத்தின் தலைவர் N. அழகன் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவின் விருந்தினரும் நலச்சங்கத்தின் செயலாளருமான.கா.தமிழரசன் தேசிய கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினரான திருச்சி மாநகராட்சி 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் K.S. நாகராஜன் 8வது குறுக்குத் தெரு அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்தை (எங்களது 4 ஆண்டுகள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது) திறந்து வைத்தும், குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கானகோலப் போட்டி மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளிலும் பங்குபெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கி அவர் பேசியதாவது..
நகருக்கு 7வது குறுக்குத்தெருவில் புதியதாக பாலம் கட்டும் பணி 2/3 நாட்களில் தொடங்கப்படும், சில இடங்களில் தெருவிளக்குகள் இல்லை என்ற கோரிக்கையையும் விரைவில் அமைத்து கொடுக்கப்படும். பாதாள சாக்கடை பணி விரைவில் ஆரம்பிக்க முயற்சி எடுத்து வருவதாகவும் கூறினார். 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் அதிகமான பெண்கள் மற்றும் சிறுவர் / சிறுமிகள் கலந்து கொண்டனர்.
மேலும் நலச்சங்கத்தின் பொருளாளர் முத்துகிருஷ்ணமூர்த்தி உதவி பொருளாளர் .சீனிவாசன், உப தலைவர் குமாரசாமி, இணைச் செயலாளர் பாலு, செயற்குழு உறுப்பினர்கள் சூரியக்குமார், மனோகரன் செல்லதுரை
திருமதி. ஹேமலா தேவி, கலா, அமுதா ரேவதி, லதா மற்றும் பொதுமக்கள் சிறுவர் | சிறுமிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். நிகழ்ச்சியை செயற்குழு உறுப்பினரான சுந்தர் தொகுத்து வழங்கினார். நிறைவாக இணைச் செயலாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.
– பிரபு பத்மநாபன்