அங்குசம் சேனலில் இணைய

இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதம் ! போர்க்கொடி தூக்கிய வணிகர்கள் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்தியாவில் சில்லறை வணிகத்தில் கோடிக்கணக்கான ஏழை மற்றும் சிறு குறு நடுத்தர வணிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வேலை இல்லா திண்டாட்டத்திற்கு மாற்றாக, சுயதொழில் என்ற அடிப்படையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சில்லறை வணிகம் மிகச்சிறந்த பங்களிப்பு வழங்கி வருகின்றது. மேலும், சிறு குறு நடுத்தர வணிகர்களின் வருவாய் ஆதாரமாக வாழ்வாதாரமாகவும் சில்லரை வணிகம் விளங்கி வருகின்றது.

அண்மைக்காலமாக அகில இந்திய அளவில் பெருகிவரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நேரடி சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றன. கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஏராளமான சலுகைகள் என்ற தோற்றத்தை சிறு குறு நடுத்தர வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏராளமானோர் தங்கள் வணிகத்தை இழந்து மாற்று வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களில் மேற்கண்ட நடவடிக்கைகள் இந்திய சில்லறை வணிகர்களுக்கு எதிரான தீவிரவாதம் என்றே கருத வேண்டி உள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

முற்றுகை போராட்டம்இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான டி மார்ட் நிறுவனம் திருச்சியில் ஏற்கனவே இரண்டு இடங்களில் மிகப்பெரிய அளவில் இயங்கி வருகின்றது. தற்போது இதே திருச்சியில் மூன்றாவது கிளையை 1,50,000 சதுர அடி பரப்பளவில் மிகப் பிரமாண்டமாக அமைக்க ஆயத்தமாகி வருகிறது. இவ்வாறு கார்ப்பரேட் நிறுவனங்களில் புதிய கிளையை தொடங்கி  கொண்டே செல்வதால், அந்தந்த பகுதிகளில் உள்ள சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை ஏறத்தாழ 30 லட்சம் சில்லறை வணிகர்கள் சிற்றூர் முதல் நகரம் வரை பரந்து விரிந்துள்ளனர். சுமார் ஒரு கோடி வாக்காளர்களை உள்ளடக்கிய வணிக குடும்பங்களாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, சில்லறை வணிகத்தை அச்சுறுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடும் வகையில் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திடும் வகையிலும் திருச்சியில் டி.மார்ட் நிறுவனத்திற்கு எதிராக அடையாள முற்றுகை போராட்டம் நடத்துவது என பேரமைப்பு மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அதன்படி ஆக-30 சனிக்கிழமை அன்று திருச்சியில் டி மார்ட் நிறுவனத்தின் மூன்றாவது கிளை அமைய உள்ள வயலூர் ரோடு வாசன் வேலி பகுதியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு மாநில போராட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

முற்றுகை போராட்டம்மாநில பொதுச் செயலாளர் முன்னிலை வகித்தார். மாநில தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார். மாநில கூடுதல் செயலாளர்கள், மண்டல தலைவர்கள் மாநிலத் துணைத் தலைவர்கள் மாநில இணைச்செயலாளர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மாநகரங்களின் தலைவர்கள் செயலாளர் பொருளாளர் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தின் கிளை சங்கத் தலைவர் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் இளம் தொழில் முனைவோர்கள் அணியினர், பழைய பொருள் அணியினர் உட்பட மாநில முழுவதும் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முற்றுகை போராட்டம்மேலும், இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு அளிக்கும் வகையில் பல்வேறு தொழில் சார்ந்த வணிக சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் உரையாற்றிய மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா கார்ப்பரேட் கம்பெனிகளின் சில்லறை வணிக  ஆதிக்கத்தால் சிறு குறு அடித்தட்டு வணிகர்களுக்கு வருவாய் இழப்பு வாழ்வாதார இழப்பு ஏற்பட்டு வறுமை நிலைக்கு தள்ளப்படுவதை தடுக்கும் விதமாகவும், சிலரை வணிகத்தை பாதுகாக்கும் விதமாகவும் முதற்கட்டமாக மாநில அரசுகள் சட்ட விதிகளின் உரிய மாற்றம் செய்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சில்லறை வணிக ஆதிக்கத்தை அடியோடு தடுத்து நிறுத்த வேண்டும். உரிய தீர்வு  ஏற்படாத பட்சத்தில் டி மார்ட் உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களையும் முற்றுகையிடும் போராட்டம் மிக தீவிரமாக விரைவில் மேற்கொள்ளப்படும் என்று  தெரிவித்தார். போராட்டத்தின் இறுதியில் மாநில பொருளாளர் ஏ.எம்.சகத்துல்லா நன்றி கூறினார்.

முற்றுகை போராட்டம்இப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் எம்.தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் வி.ஸ்ரீதர் மாவட்ட செயலாளர் செந்தில், என் பாலு மாவட்ட பொருளாளர் எ.தங்கராஜ் மாநகர  தலைவர் எஸ் ஆர் வி கண்ணன் மாநகரச் செயலாளர் வி.பி.ஆறுமுகப்பெருமாள், மாநகர பொருளாளர் ஜி ஜானகிராமன், திருச்சி மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஏ. எம். பி.அப்துல் ஹக்கீம், மாவட்ட செயலாளர் எஸ் கார்த்திக், மாவட்ட பொருளாளர் ஆர் பிரசன்னா, திருச்சி மாநகர் இளைஞர் அணி தலைவர் கே எம் எஸ் மைதீன், மாநகர செயலாளர் பா திருமாவளவன், பொருளாளர் எஸ் ஆர் எம் அப்பாதுரை மற்றும் திருச்சி வயலூர் ரோடு புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் கோயிலூர் சாலை புத்தூர் பகுதி அனைத்து கடை வியாபாரிகள் நல சங்கம் சோமரசம்பேட்டை இரட்டை வாய்க்கால் அல்லித்துறை வியாழன்மேடு மற்றும் சுற்றுப்புற பகுதி வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 

  —    ப. பிரபு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.