பழிக்குப் பழி – எம்எல்ஏ எதிராக அணிதிரட்டும் மேயர்!
கடலூர் மாநகராட்சி மன்ற கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய ஒவ்வொரு கவுன்சிலர்களும் பல கேள்விகளை முன்வைத்தனர், இதற்கு மேயர் விளக்கம் அளித்து பேசினார். தொடர்ந்து பேசிய மேயர் சுந்தரி கடலூர் சட்டமன்ற தொகுதியை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூடுதலாக பார்த்துக் கொள்வார் என்று கூறினார்.
இந்தப் பேச்சு கடலூர் எம்எல்ஏ அயப்பனின் ஆதரவாளர்கள் காதுக்கு போக சலசலப்பு நிலவுகிறது, கடலூர் எம்எல்ஏ அயப்பன் நடை பெற்று முடிந்த மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலில் திமுகவிற்கு எதிராக உள்ளடி வேலை செய்ததால் திமுக தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தம் செய்தது. இந்த நிலையில் தான் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான சுந்தரி மாமன்ற கூட்டத்திலேயே தான் மேயர் ஆவதற்கு எதிராக செயல்பட்ட எம்எல்ஏவுக்கு எதிராக பேசியிருக்கிறார்.
மேலும் சில திமுக நிர்வாகிகள் கூறியது, அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டத்தை தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி எடுக்கிறார். இதன் ஒரு பகுதியாகத்தான் தனக்கு ஆதரவான நபர்களை அனைத்து பொறுப்புகளிலும் அமர்த்தி வருகிறார். இந்த நிலையில் தான் கடலூர் எம்எல்ஏ அயப்பன் கட்சி அறிவித்து அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதால் நீக்கம் செய்யப்பட்டார். அதேநேரம் கட்சியிலிருந்து மட்டுமே நீக்கம் செய்யப்பட்டிருக்கிறாரே தவிர எம்எல்ஏவாக இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்த நிலையில் எம்எல்ஏ அயப்பன் கட்சியில் இணைவதற்கான வேலையை மீண்டும் முன்னெடுத்துக் கொண்டிருக்க எம்எல்ஏ எதிராக மற்றவர்களை அணிதிரட்டவே மாமன்ற கூட்டத்தில் மேயர் இதுபோன்று பேசியிருக்கிறார் என்று கூறுகின்றனர்.