பள்ளி மாணவனுடன் எஸ்கேப் ஆனா டீச்சர் போக்சோவில் கைது !

ஜோஸ்.

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

 

பள்ளி மாணவனுடன் ஓடிச் சென்று திருமணம் செய்த பள்ளி ஆசிரியை , “போக்சோ ” வில் கைது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரியும் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த சர்மிளா என்ற ஆசிரியையும் , அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் துறையூரை சேர்ந்த மாணவனும் கடந்த 5-ம் தேதி ஒரே நாளில் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சர்மிளா டீச்சர்

மாணவனை எங்கு தேடியும் காணாததால் கடந்த 11-ம் தேதி மாணவனின் பெற்றோர் துறையூர் காவல் நிலையத்தில் தன் மகனைக் காணவில்லை எனவும், அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை சர்மிளா மீது சந்தேகம் உள்ளதாகவும் புகார் அளித்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

புகாரின் அடிப்படையில் போலீசார் மாணவனை தேடிய போது , ஆசிரியையின்செல்போனை டிரேஸ் செய்து பார்த்த போது , இருவரும் திருவாரூர் , தஞ்சாவூர், திருச்சி என சுற்றி , கடைசியில் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியையின் சினேகிதி வீட்டில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து துறையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கலைச் செல்வன் தலைமையில் செந்தில் , கோவிந்த் , ராஜ்குமார் ,ஆனந்த் உள்ளிட்ட குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று இருவரையும் துறையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர் .

விசாரணையில் இருவரும் திருவாரூரில் சுற்றித் திரிந்து, பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் இருவரும் யாருக்கும் தெரியாமல், ” தாலி கட்டி “திருமணம் செய்து கொண்டதும், பின்னர் திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஆசிரியை சர்மிளாவின் தோழியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர் மைனர் என்பதால் மாணவனை காப்பகத்திற்கு அனுப்பிய போலீசார் , ஆசிரியை அதிக வயதுடையவர் என்பதால் , தனியார் பள்ளி ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து, திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் .

தனியார் பள்ளி ஆசிரியை தன்னிடம் படித்த மாணவனை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்த சம்பவம் துறையூர் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.