கோவில்பட்டி அருகே ஜேசிபி இயந்திரம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து !
கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற ஜேசிபி இயந்திரம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து -15 பேர் காயம்
திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த அரசு விரைவு பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்றுள்ளது. பேருந்து இன்று அதிகாலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துப்பட்டி விலக்கு பகுதியில் வந்து கொண்டு இருந்த போது முன்னால் திருச்சியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற கொண்டு இருந்த ஜேசிபி இயந்திரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதில் அரசு விரைவு பேருந்தின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது, ஜேசிபி எந்திரத்தின் பாகங்கள் உடைந்து சாலையில் கிடந்தன. விபத்தில் ஜேசிபி எந்திரத்தின் டிரைவர், உதவியாளர் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் என 15 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் நாலாட்டின்புதூர் போலீசார் ஆகியோர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
— மணிபாரதி.