சாலைக்காக கொன்று குவிக்கப்பட்ட பறவைகள்…’- வைரல் வீடியோவால் ஜேசிபி டிரைவர் கைது!..

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

சாலைக்காக கொன்று குவிக்கப்பட்ட பறவைகள்…’- வைரல் வீடியோவால் ஜேசிபி டிரைவர் கைது!..

 

அங்குசம் இதழ்..

கேரள மாநிலம் மலப்புரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலப்புரம் மாவட்டம் தலப்பாறை, வி.கே.பாடியில் உள்ள மரம் ஒன்றில் பறவைகள் அதிகமாக வசித்து வந்த நிலையில்..

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் கொண்டு மரத்தை அகற்றும்பணி நடைபெற்றது. அப்பொழுது ‘சடார்’ என்று மரம் கீழே விழ, மரத்தில் தங்கி இருந்த பறவைகள் ‘பட பட’ வென பறந்து சென்றன. இருப்பினும் பல பறவைகள் பறக்க முடியாமல் மரத்துடன் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தன.

சாலையிலேயே பறவைகள் குவியல் குவியலாக இறந்து கிடக்கும் புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக புகார்கள் எழுந்த நிலையில் அந்த மரத்தினை வெட்டிய ஒப்பந்ததாரர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மரத்தை வெட்டி அகற்றிய ஜேசிபி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஜேசிபி வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.