உப்பிலியபுரம் அருகே கள்ளத்துப்பாக்கியோடு வேட்டையாட முயன்ற இருவர் கைது

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

உப்பிலியபுரம் அருகே கள்ளத்துப்பாக்கியோடு வேட்டையாட முயன்ற இருவர் கைது

 

திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அடுத்த கொப்பம்பட்டி அருகே காஞ்சேரிமலை புதூர் ,மண்மலை வனக்காப்புக்காடு பகுதியில் துறையூர் வனச்சரக அலுவலர் பொன்னுசாமி தலைமையில் சோபனபுரம் பிரிவு வனவர் சியாம் சுந்தர் வனக் காப்பாளர்கள் ஆனந்தன், தனலட்சுமி மறவேல் உள்ளிட்ட படக்குழுவினர் காஞ்சேரி மலை பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது இருவர் நெற்றியில் டார்ச்லைட்டுடன் சுற்றித் திரிவதை கண்டு அவர்களை வனக்குழுவினர் சுற்றி வளைத்தனர்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

Thuraiyur
Thuraiyur

மேலும் அவர்களிடம் விசாரணை செய்ததில், கைதான இருவரும் சகோதரர்கள் என்பதும் , சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகா, ஆத்திநாடு, மாயம்பாடி அடுத்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன்களான குமார் (38) பிரபு(26) என்பதும் , அவர்களிடமிருந்த நாட்டுத்துப்பாக்கி ஒன்றையும், துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் வெடி பொருட்கள் மற்றும் பால்ரஸ் குண்டுகளையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது கள்ளத்துப்பாக்கி என்பது விசரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.