அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம்
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபக் சிவாச் I.P.S., உத்தரவின் படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் 19.06.2025 சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுத்தல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டம் அரியலூர் உட்கோட்ட காவல் துணைகண்காணிப்பாளர் R.ரகுபதி மற்றும் அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் ஆகியோர் தலைமையிலும், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டால்மியா, ராம்கோ, அல்ட்ராடெக், செட்டிநாடு, அரசு சிமெண்ட், இந்தியா சிமெண்ட் நிறுவனங்களின் அலுவலர்கள் மற்றும் தனியார் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர்களும் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் சாலை பாதுகாப்பு சம்பந்தமாகவும் விபத்து ஏற்படாமல் தடுத்தல் சம்பந்தமாகவும் விரிவாக கலந்துரையாடல் நடைபெற்றது.
அரியலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5:30 மணி வரையிலும் கனரக வாகனங்களை இயக்கக் கூடாது, அரியலூர் நகர் பகுதிக்குள் peak hours-ல் கனரக வாகனங்கள் வரக்கூடாது. வாகனங்களை அனுமதிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும், அதிவேகமாக இயக்கக் கூடாது.
சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் போது கண்டிப்பாக தார்ப்பாய் கட்ட வேண்டும். சாலை ஓரங்களில் லாரியை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், குடிபோதையில் கனர வாகனங்களை ஓட்டக்கூடாது, சாலை பாதுகாப்பு விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது.