மூதாட்டியை மிரட்டி பணம், நகை பறிப்பு! வாலிபா் கைது!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு புலிவலம் கிராமத்தில் வசிக்கும் சுப்புலெட்சுமி 80/26, க.பெ.காத்தபெருமாள் என்பவர் கடந்த 120126-ம் தேதி இரவு 1000 மணியளவில் அவரது வீட்டில் தூங்கிக்கொண்டிருத்த போது எதிரி சூர்யா @ சூலி 26/26. S/o சின்னராசு, அரிஜன தெரு, வடக்கு புலிவலம், கொடியாலம், ஸ்ரீரங்கம் தாலுக்கா, திருச்சி மாவட்டம் என்பவர் மேற்படி தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்து, அவரை கைகளால் தாக்கி அவர் அணிந்திருந்த 4 கிராம் மதிப்புள்ள தங்கக் கம்மல் மற்றும் ரூ.3000 ரூபாய் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக செந்தில்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜீயபுரம் கா.நி குற்ற எண். 14/26. ச/பி. 309(4),311 BNS ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரியான சூர்யா @ சூலி 26/26, S/o சின்னராசு, அரிஜன தெரு, வடக்கு புலிவலம் கொடியாலம், ஸ்ரீரங்கம் தாலுக்கா திருச்சி மாவட்டம் என்பவர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம், இகாப, பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 07.02.2026-ம் தேதி அன்று சிறையில் உள்ள எதிரியிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும் திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 08 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.