அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நிலத்தை அளவீடு செய்ய ரூ.5000 லஞ்சம் ; – கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

நிலத்தை அளவீடு செய்ய ரூ.5000 லஞ்சம் ; – கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் கைது!

விவசாயிடம் நில அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அடுத்த மங்களப்பள்ளியை சேர்ந்த விவசாயான முருகன் தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்து தருமாறு கொரட்டி கிராம நிர்வாக அலுவலரை நேரில் அணுகியுள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அப்படியானல் அதற்காக சர்வேயருக்கு ‘5000 ரூபாய் லஞ்சம் தர வேண்டும். அப்படிக் கொடுத்தால் மட்டுமே உமது நிலத்தை அளவீடு செய்து உங்கள் பெயருக்குப் பட்டா மாற்ற ஏற்பாடு செய்யப்படும்’ என்று தண்டுகாணூரைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் வெண்ணிலா என்பவர் முருகனிடம் கூறியுள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகன் நாளைக்கு பணத்தோடு வருவதாக கூறிவிட்டு நேராக மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜி தலைமையிலான போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முருகனிடம் கொடுத்து அதைக் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் வெண்ணிலாவிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

Admission Enquiry Form

இதனையடுத்து , நேராக கொரட்டி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குச் சென்ற முருகன் நிர்வாக உதவியாளர் வெண்ணிலாவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்து அனுப்பிய ரூபாய் ஐந்தாயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்தார் அங்கு, ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உதவியாளர் வெண்ணிலாவை கையும் களவுமாகப் பிடித்து வழக்கு பதவி செய்து வேலூர் மத்திய சிறையிலடைத்துள்ளனர்.

 மேலும் கொட்டி கிராம அலுவலர் மற்றும் நில அளவீடு செய்யும் சர்வேயர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

– மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.