“சோஷியல் மீடியா சகவாசம், சர்வநாசம்” – ‘சாரி'(Saaree) படம் சொல்லும் சங்கதி!
ஆர்ஜிவி ஆர்வி புரொடக்சன்ஸ் எல்எல்பி பேனரில் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாரி’.(Saaree). தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் 4, அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மார்ச் 29- ஆம் தேதி மதியம் நடந்தது.
இதில் பேசியவர்கள்….
ஹீரோயின் ன் ஆராத்யா தேவி
“நான் கேரளாப் பொண்ணு. ‘சாரி’ படத்தின் டிரெய்லர், பாடல்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். ‘கேர்ள் நெக்ஸ்ட் டோர்’ கதாபாத்திரத்தில்தான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன். சோஷியல் மீடியாவின் நெகட்டிவ் மற்றும் இருட்டுப் பக்கங்களை இந்தப் படம் பேசுகிறது. நிச்சயம் பெண்கள் இதை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ள முடியும். ஆராத்யா என்ற கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை” .
ஹீரோ சத்யா யாது,
“நான் உத்ரபிரதசேத்தை சேர்ந்தவன். இதுதான் எனக்கு அறிமுகப் படம். இதற்கு முன்பு சில சீரியல்களில் நடித்திருக்கிறேன். ‘சாரி’ படம் ஒரு சைக்கலாஜிக்கல் த்ரில்லர். சோஷியல் மீடியா ஸ்டாக்கிங் பற்றி படம் பேசுகிறது. பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இந்தப் படத்தை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்”.
தயாரிப்பாளர் ரவி ஷங்கர் வர்மா,
“ராம் கோபால் வர்மா சாருடன் எனக்கு இது முதல் படம். நல்ல படங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம்”.
கேரள விநியோகஸ்தர் ஷானு,
“இப்போது சோஷியல் மீடியாவில் என்ன நடக்கிறது என்பதை அப்படியே இந்தப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு ஜாபர் ஸ்டுடியோஸ் வினோத்தை படம் பார்க்க அழைத்தேன். படம் பிடித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் விநியோகிக்க கேட்டுக் கொண்டோம். 100 சென்டருக்கும் மேலாக தமிழகத்தில் நானே ரிலீஸ் செய்கிறேன் என சொன்னார். படத்தை புரமோட் செய்யுங்கள்”.
தமிழ்நாடு விநியோகஸ்தர் வினோத்,
“இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ரசிகன் நான். ‘சாரி’ படம் பார்த்ததும் மிகவும் பிடித்திருந்தது. தமிழகத்தில் படத்தை நானே ரிலீஸ் செய்ய ஒத்துக் கொண்டேன். விநியோகஸ்தராக இது என்னுடைய முதல் படம். உங்கள் ஆதரவு தேவை”.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இயக்குநர்& தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா,
“ஒவ்வொரு படத்திற்கும் ஒரு மையக்கரு உள்ளது. ‘சாரி’ படத்தின் கரு சோஷியல் மீடியாவின் தாக்கம் உறவுகளில் எப்படி இருக்கிறது என்பதுதான். சில நேரங்களில் கெட்ட விஷயங்கள் நடந்து அது உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தலாம். முழுநேரமும் சோஷியல் மீடியாவில் இருப்பது சர்வநாசத்தைத் தான் ஏற்படுத்தும்.இப்படத்தின் ஆராத்யா கதாபாத்திரம் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைத்தான் ‘சாரி’ திரைப்படம் பேசுகிறது”.
— மதுரை மாறன்.