அரசு இடத்தை போலி பத்திரம் போட்டு விற்றதாக புகார் ! சர்ச்சையில் அமெரிக்கன் மிஷன் போர்டு !!

முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்துவ சீர்திருத்த மக்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தானமாக கொடுத்த அரசு இடத்தை போலி பத்திரம் போட்டு விற்றதாக புகார் !
சர்ச்சையில் அமெரிக்கன் மிஷன் போர்டு !!

துரை மாநகராட்சி கே.புதூர் இரட்சண்யபுரம் பகுதியில் ஏழை விதைவைப் பெண்கள், கண் பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் நலனுக்காக அரசினால் நிபந்தனையின் பேரில் அமெரிக்கன் மிஷன் போர்டுக்கு கொடுக்கப்பட்ட சுமார் 933 கோடி மதிப்புள்ள 31 ஏக்கர் நிலத்தை போலி பத்திரம் தயார் செய்து விற்பணை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மேற்படி இடம் அரசுக்கே சொந்தமானது என்று தீர்ப்பாகியிருக்கிறது. இந்நிலையில் மேற்படி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்துவ சீர்திருத்த மக்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இந்த விவகாரம் தொடர்பாக கிறிஸ்துவ சீர்திருத்த மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தே.தேவசகாயம் கொடுத்துள்ள புகார் மனுவில், “ஆதரவற்ற குழந்தைகளுக்கள் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அமெரிக்கன் மிஷின் போர்டுக்கு கொடுக்கப்பட்டு. ரூ 933 கோடி மதிப்பிலான 31.10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அரசு இடத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு சிஎஸ்ஐ அமைப்பின் மதுரை நிர்வாகிகள் பெர்ணான்டஸ் ரத்தின ராஜா மற்றும் பெயிண்ட் கடை ஜான்சன் இஸ்ரேல், முன்னாள் பேராயர் ஜோசப் ஆகிய மூவரும்  சேர்ந்து போலி ஆவணங்கள் தயார் செய்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனத்திற்கும், கடைகள், மற்றும் வணிக வளாகங்கள் கட்டி விற்பனை செய்தனர். இதை எதிர்த்து கடந்த 2022 ம்  ஆண்டு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டு மதுரை உயர்நீதி மன்ற கிளை விசாரித்து மாநில நில நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

அதனை தொடர்ந்து நிலநிர்வாக ஆணையர் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பு இடம் அரசுக்கு சொந்தமானது என்று உறுதி செய்து அறிக்கை தாக்கல் செய்தார்கள். அதன்படி ஆக்கிரமிப்பு இடத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. எனவே அரசு இடத்தை போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்த சிஎஸ்ஐ அமைப்பின் மதுரை நிர்வாகிகள் பெர்ணான்டஸ் ரத்தின ராஜா, பெயிண்ட் கடை ஜான்சன், இஸ்ரேல் முன்னாள் பேராயர் ஜோசப் ஆகிய மூவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

– ஷாகுல், படங்கள்: ஆனந்த்.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.