சேலம் மாநகராட்சி சுகாதார மையத்தில் முதன்மை செயலாளர் செந்தில்குமார் நேரில் ஆய்வு!
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் குமாரசாமிபட்டி நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்தில் முதன்மை செயலாளர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முனைவர் பி.செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது நகர்ப்புர சமுதாய சுகாதார மையத்திற்கு தினந்தோறும் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணி குறித்தும், பிரசவ அறை, புறநோயாளிகள் பிரிவு, கர்ப்பிணிகள் பரிசோதனை மையம், மருந்தகம், சிறப்பு மருத்துவப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஆய்வகம், சளி பரிசோதனை கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்ததோடு மாதத்திற்கு எத்தனை பிரசவங்கள் நடைபெறுகிறது. பிரசவ அறையில் தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள் குறித்தும், ஆய்வகத்தில் மேற்கொள்ளும் பரிசோதனைகள் என்ன என்பதையும் கேட்டறிந்ததோடு இந்த மையத்திற்கு மேலும் கூடுதலாக தேவைப்படும் வசதிகள், மருத்துவ உபகரணங்கள் குறித்தும், மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
இம்மையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சேலம் மாநகராட்சிப் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் 32 நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு அதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது.
தென் அழகாபுரம், குமரன் நகர் ஆகிய இடங்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டடத்தை ஆய்வு செய்த செயலளர் அவர்கள் நலவாழ்வு மையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், அந்த மையத்திற்கு தேவையான மருத்துவ பணியிடங்கள், அந்த மையத்தில் அளிக்கப்படவுள்ள சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை டீன் மரு.மணி, துணை இயக்குநர்கள் சுகாதாரம் மரு.எஸ்.சவுண்டம்மாள், மரு.பி.ஆர். ஜெமினி, மரு.என்.யோகானந், கண்காணிப்பு பொறியாளர் ஜி.ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சோழன் தேவ்
மேலும் செய்திகள் படிக்க:
https://angusam.com/a-private-school-that-refuses-to-provide-education-through-rte/
அங்குசம் யூடியூப்
https://youtube.com/@AngusamSeithi