பெட்ரோல் குண்டு வீச்சு! இருசக்கர வாகனம் சேதம்!
சேலம் தாதகாப்பட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கன் தெருவை சேர்ந்தவர் திருத்தணி செல்வம் (40 ) இவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு வீட்டில் தூங்க சென்றிருந்த நிலையில் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் பீர் பாட்டில்கள் உடைந்துள்ளது. இந்த நிலையில் மர்ம நபர்கள் பீர் பாட்டில் மூலம் பெட்ரோல் குண்டு வீசி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…