திருச்சியில் சமோசா வியாபாரி போக்சோவில் கைது:
திருச்சியில் சமோசா வியாபாரி போக்சோவில் கைது.
திருச்சி மாவட்டம் லால்குடி மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அகிலாண்டேஸ்வர் நகர் பகுதியில் 9 வயது சிறுமியை அவரது வீட்டில் அருகே உள்ள சம்சா வியாபாரி நத்தர்ஷா (32), எனும் நபர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சிறுமி விளையாட செல்லும் போது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள் மேற்கண்ட நபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.
ஜித்தன்