முதல்வர் அனுமதியுடன் மணல் கடத்தல் ! ஓபன் டாக் வட்டாட்சியர் பகீர் ஆடியோ ! வைரல் ஆடியோ
முதல்வர் அனுமதியுடன் மணல் கடத்தல் !
ஓபன் டாக் வட்டாட்சியர் பகீர் ஆடியோ !
வைரல் ஆடியோ
முதலமைச்சர் உத்தரவு – புகார் அளித்தவரை மிரட்டிய தாசில்தார் இடமாற்றம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டி பகுதியில் காலை இரவு என்று இரண்டு நேரங்களிலும் மணல் அள்ளுவது அதிகரித்து வருவதாக அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு புகார் அளித்தார். அப்போது முதல்வர் அனுமதியுடன் மணல் கடத்தல் நடப்பதாக தாசில்தார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆடியோ லிங்
ஓபன் டாக் வட்டாட்சியர் பகீர் ஆடியோ !
அப்போது இருவருக்கும் நடந்த கலந்துரையாடல் பின்வருமாறு,
கண்ணன் : சார் இரவு நேரத்தில் அதிகமான மணல் லாரி ஓடுது, விஏஓவுக்கு போன் செய்தால் வருகிறேன் என்று கூறிவிட்டு பிறகு போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
தாசில்தார் சேக்கிழார் : பர்மிசன் வாங்கிட்டு தான் மணல் ஓட்டுறாங்க, அது கவர்மென்ட் மற்றும் அமைச்சர் ஸ்டாலின் உத்தரவு மேலிட அனுமதி.
கண்ணன் : சார் பகல் நேரத்திலையாவது சின்ன வண்டியில தான் மணல் எடுக்குறாங்க, நைட்டு நேரத்துல பெரிய வண்டியில் அதிகமாக எடுக்குராங்க.
வட்டாட்சியர் சேக்கிழார் : எடுக்க தான் செய்வாங்க, அனுமதி வாங்கி இருக்காங்க, நீங்க பேசாம தான் இருக்குனும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு, நீங்க செவனேன்னு இருங்க, யாரும் கேட்கக் கூடாதுங்க, மேலிட பர்மிஷன் வாங்கி தான் ஓடுது, அதனால உங்களுக்கு என்னங்க !
ஆடியோ லிங்
ஓபன் டாக் வட்டாட்சியர் பகீர் ஆடியோ !
கண்ணன் : சார் உங்க பேரு
வட்டாட்சியர் சேக்கிழார் : உங்க பேர் என்ன
கண்ணன் : கண்ணன் சார்
வட்டாட்சியர் சேக்கிழார் : எந்த ஊரு
கண்ணன் : எந்த ஊர் என்று தெரியாமல் தான் இவ்ளோ நேரம் பேசினீங்களா சார்
வட்டாட்சியர் சேக்கிழார் : போன வைய்யா, என்று மிரட்டும் பாணியில் பேசி பேச்சை முடித்தார்.
இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழார் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டு இருக்கிறார்.
ஆடியோ லிங்