சசிகலா ஆதரவாளர்களை வலைவீசி துரத்தி பிடிக்கும் எடப்பாடி டீம் ஆபரேஷன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தென் மாவட்டங்களில் சசிகலா ஆதரவாளர்களை வலை வீசத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி …. அதிர்ச்சியில் சசிகலா…… தென் மாவட்டங்களில்   சசிகலாவுக்கு என தனிசெல்வாக்கு உள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக சசிகலா தென்காசி அரசியல் பயணம் தொடங்கிய நாளிலிருந்து அவரது ஆதரவாளர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளார்களாம்.

இதுவரை சசிகலாவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய டிடிவி தினகரனின் அமமுக வினர் அப்படியே யுடர்ன் போட்டு விட்டனராம். காரணம், டிடிவி தினகரனின் உதவியாளர் ஒருவர் இனி யாரும் சசிகலாவை  வரவேற்கவோ,  அவரை நேரில் பார்க்க போகவோ கூடாது என்று தடாலடியாக உத்தரவையும் போட்டுள்ளாராம்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

தென்காசி மக்கள் பயணத்தில் சசிகலாவின் உடன்பிறப்பு  மன்னார்குடி காரரும் அவரது மகனும் ஏற்பாடுகள் செய்தார்களாம். இதனால் கொதித்து போன டிடிவி இனி யாரும் சசியை  வரவேற்க போகக்கூடாது என்று தனது உதவியாளர் ஒருவர் மூலம் தென் மாவட்டங்களில் உள்ள தனது அமமுக கட்சியினர்க்கு உத்தரவு போடச் சொல்லிவிட்டாராம்.

இதனால் இனி தென் மாவட்டங்களில் சசிகலாவிற்கு ஆதரவாக அமமுக கட்சியினர் போக மாட்டார்களாம். இதற்கு காரணம் தினகரனுக்கும் திவாகரனுக்கும் ஏழாம் பொருத்தமாம். ஆகவே ஆகாதாம். இது தான் அந்த ரகசியம் என்று சொல்கிறார்கள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

எடப்பாடி அணி ராஜேந்திர பாபாஜி
எடப்பாடி அணி ராஜேந்திர பாபாஜி

விசயம் இப்படி இருக்க சசிகலாவின் ஆதரவாளர்களிடம் எடப்பாடி ஆட்கள் குதிரை பேரம் நடத்தி சசிகலா ஆதரவாளர்களை அதிமுகவில் பொறுப்புகள் தந்து அழைக்க தொடங்கிவிட்டனராம். எப்படி தெரியுமா? “நீங்கள் அந்த அம்மாவை நம்பி போகாதீங்க அவர்கள் குடும்பத்தினரை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அங்கே உங்களுக்கு மரியாதை கிடைக்காது. நீங்கள் என்னதான் செலவு செய்தாலும் கடைசியில் உங்களை செல்லாக்காசாக்கி விடுவார்கள் . அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்கள் ஆசி இருந்தால்தான் நீங்கள் சசிகலாவை பார்க்க முடியும்” என்ற பிட்டை போட்டு தான் கேன்வாஸ்  பார்க்க வரவில்லையாம்.

இதனை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்கள், “ நாங்கள் தான் ஏற்கனவே சொன்னோம். நீங்க கேட்டிங்களா?  நீங்கள் அந்தம்மா பின்னாடி போனீங்க இப்ப என்னாச்சு. அதனால் தான்  நாங்கள் திருநெல்வேலியில் சசிகலா ஆதரவாளர்களை எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கினோம்.

ஆனா உன்னை நாங்கள் நீக்கவில்லை எப்படி இருந்தாலும் நீங்கள் எங்கள் பின்னால் வருவீங்க என்று எங்களுக்கு தெரியும் என்று கூறி உள்ளார்களாம் எடப்பாடி தரப்பில்.  உடனே அந்த வெண்மையான மதி என்ற பெண் “நான் சசிகலா ஆதரவாளர்களை வெளியில் இருந்து உங்களோடு தொடர்ந்து அனுப்பி விடுகிறேன்.

இனி தென்மாவட்டங்களில் சசிகலா ஆதரவாளர்கள் இருக்க மாட்டார்கள் “ என்று சபதம் போட்டு பல லகரங்களை பெற்று தற்போது தனது வேலையை தொடங்கி விட்டாராம். முதற்கட்டமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அமமுக மாவட்ட செயலாளர் காளிமுத்து விடம் பேசி எடப்பாடி அணியில் சேர்த்து விட்டார்.

சசிகலாவின் ஆதரவாளர் சுரேஷ்
சசிகலாவின் ஆதரவாளர் சுரேஷ்

இந்த வாரம் திருநெல்வேலியில் பசையுள்ள சசிகலாவின் தீவிர ஆதரவாளரான சுரேஷ் என்பவரை எடப்பாடியை சந்திக்க நேரம் வாங்கி கொடுத்து தனது வேலையை கனகச்சிதமாக செயல்படுத்தி விட்டாராம். அடுத்து தேவர் ஜெயந்திக்குள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சசிகலா ஆதரவாளர்களை தட்டி தூக்கி விட்டு மதுரை சிவகங்கை  போன்ற மாவட்டங்களில் சசிகலா ஆதரவாளர்களை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார்களாம் எடப்பாடி அணியினர். இதனால் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த யோசனையிலும் மூழ்கி விட்டாராம் சசிகலா.

-அங்குசம் செய்தி பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.