வேதம் ஓதும் சாத்தான்கள் ! இனிகோ இருதயராஜ் கேள்வி
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் கொடூர சம்பவம் கடும் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதுதான்.அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்த ஒரு சில மணி நேரங்களிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குற்றத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவன் திமுக நிர்வாகி அல்ல என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனும், சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.
குற்றம் செய்பவர்கள் அனைத்து கட்சிகளிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் ஒவ்வொருவர் கூடவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்த பிறகோ, அவர் தவறானவர் என்பதை அறிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இல்லையா? என்பதுதான் முக்கியம்.
அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி, அன்றே கைது செய்யப்பட்டிருக்கிறான். சிறையிலும் அடைக்கப்பட்டு இருக்கிறான். அது தொடர்பான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. நடவடிக்கை தான் எடுத்தாகி விட்டதே என்று இந்த அரசும், அரசோடு தொடர்புடையவர்களும் சமாதானம் அடைந்து விடவில்லை.
பெண்களுக்கு எதிரான இது போன்ற சம்பவங்கள் கல்வி வளாகங்களில் இனி எப்போதும் நடக்காமல் தடுத்து நிறுத்துவது எப்படி என்பதற்கான விழிப்புணர்வை அரசும், நாமும் உணர்ந்திருக்கிறோம். அல்லது இந்தச் சம்பவம் கற்றுக் கொடுத்திருக்கிறது.
அரசு தரப்பிலான இத்தனை நடவடிக்கைகளுக்குப் பின்னும், பாரதிய ஜனதா கட்சியும், அண்ணா பல்கலைக்கழக சம்பவத்திற்காக அதிமுகவும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
போராட்டம் நடத்தும் இவர்களின் யோக்யதை என்ன தெரியுமா?
சென்னை அயனாவரத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வடக்கில் பாஜக செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் கைது.
சிவகங்கை மாவட்ட பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவுத் தலைவர் சிவகுரு துரைராஜ் தான் நடத்தி வந்த நர்சிங் கல்லூரி மாணவியை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது.
பாஜக எஸ்சி எஸ்டி பிரிவின் கோவை மாவட்ட தலைவராகவும் தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவராகவும் உள்ள உக்கடம் பகுதி ஜோதி இ எஸ் ஐ மருத்துவமனையில் பணிபுரியில் தூய்மை தொழிலாளியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது.
விழுப்புரம் மாவட்ட பாஜக செயலாளர் வி.ஏ.டி.கனிவரதன் தன் மீது பாலியல் வன்முறை மேற்கொண்டதாக, விழுப்புரம் மாவட்டம் மகளிர் அணி செயலாளர் கட்சி தலைமைக்குக் கடிதம். ஓடும் ரயிலில் ஒன்பது வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், பாஜக முன்னாள் ஆர் கே நகர் வேட்பாளர் பிரேம் ஆனந்த் போக்சோ சட்டத்தில் கைது.
அதிமுக ஆட்சி காலத்தில், பொள்ளாச்சியில் 275 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்த அதிமுகவினர். அதிமுக அமைச்சராக இருந்த மணிகண்டன் மீது நாடோடிகள் திரைப்பட நடிகை பாலியல் புகார்.
குஜராத் கலவரத்தில் பில்கிஸ் பானுவைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளைக் குஜராத் அரசு விடுதலைச் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு பிறகு மீண்டும் அவர்களைச் சிறையில் அடைத்தது.
உபி ஹாத்ராஸ் நகரில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலையாளிகளுக்கு ஆதரவாகப் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, அந்தப் பெண்ணின் பிணத்தைப் பெற்றோர்களிடம் ஒப்படைக்காமல் அவசர அவசரமாக எரித்தது.
மும்பைக்கு அருகில் உள்ள தானே மாவட்டத்தில் பயந்தரில் ஒரு பெண் கார்ப்பரேட்டரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாகப் பாஜக. முன்னாள் எம்எல்ஏ நரேந்திர மேத்தா மீதும் அவரது கூட்டாளியான சஞ்சய் தார்த்தரே மீதும் புகார்.
உபி பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்தா மீது அவர் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரி மாணவி பாலியல் புகார்.
காஷ்மீரில் கத்துவா நகரில் கோயிலுக்குள் 8 வயது சிறுமியான ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட போது குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற ஒரு வழக்கில் பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்பு. மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமை செய்த பாஜக எம் பி பிரிட்ஜ் பூஷனை காப்பாற்றிய பாஜக தலைமை
புது டெல்லியை சேர்ந்த பாஜக முன்னாள் எம்எல்ஏ மனோஜ் சோக்கின் தனது மருமகளை துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு.
தெலுங்கானா மாநில பாஜக செய்தி தொடர்பாளர் மாதவனேனி ரகுநந்தன் ராவ் தனக்கு போதைப் பொருள் கொடுத்துப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பெண் பத்திரிக்கையாளர் புகார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது குழந்தை பாலியல் வன்கொடுமை வழக்கு
இரண்டு ஆண்டுகளாக அடைத்து வைத்துப் பாதையில் தொல்லை கொடுத்ததாகப் பெண் ஒருவர், கர்நாடக மாநிலத்தில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினராக இருந்த முனிரத்தினா மீது புகார்
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உத்தரப்பிரதேசம் பாஜக எம்எல்ஏ ரவீந்திரநாத் திரிபாதி தன்னை ஹோட்டலில் அடைத்து வைத்துப் பாலியல் பலாத்காரம் செய்ததாக விதவைப் பெண் புகார் உத்திர பிரதேச பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன் புகார் கொடுக்க அந்தப் பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம்.
இப்படி பாஜகவினர் மீதும், அவர்களோடு கள்ளத் தொடர்பில் இருக்கும் அதிமுகவினர் மீதும் குற்றச்சாட்டுகள் சீழ் வடிந்து நாற்றம் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தான், பாலியல் குற்றவாளிகளின் கரம் கோர்த்து கொண்டுள்ள அண்ணாமலையும், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள் மீதும் ஏன் அடிமட்ட தொண்டன் மீதும் கூட நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற எடப்பாடியும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பலாத்கார சம்பவத்திற்கு, பெண்களைத் துச்சமெனக் கருதும் இவர்களா கண்ணீர் சிந்துவது என பொது மக்கள் கேள்வி கேட்கிறார்கள்.
பதிலுக்காகக் காத்திருப்போம்.
– இனிகோ இருதயராஜ், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.