கட்டணத்தை உயர்த்துவோம் அடிப்படை வசதி செய்து தரமாட்டோம் – சாத்தூர் டோல்கேட் பரிதாபங்கள் !
மதுரை நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் எட்டுர் வட்டம் பகுதியில் செயல்பட்டு வரும், சுங்கச்சாவடியில் அடிப்படை வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதி.
இந்திய சுங்கச்சாவடி சட்டத்தின் படி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகளுக்கு குடிநீர், கழிவறை, ஓய்வு அறைகள், போன்ற அடிப்படைத் தேவைகளை சுங்கச்சாவடி நிர்வாகம், கட்டாயம் செய்திருக்க வேண்டும்.
ஆனால் சாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும், சுங்கச்சாவடியில் இது போன்ற அடிப்படை வசதி ஏதும் இல்லை குறிப்பாக கழிப்பறை மூடப்பட்டு குடிநீர், போன்ற வசதிகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்தூர் டோல்கேட்
அதேபோல் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு தனியாக அமைக்கப்பட்டுள்ள சாலை பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சுங்கச்சாவடியில் ஆண்டுதோறும் கட்டண உயர்வை உயர்த்த மும்மரம் காட்டும் மத்திய அரசும் சுங்கச்சாவடி நிர்வாகமும், வாகன ஓட்டிகளின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாதது ஏன் என வாகன ஓட்டிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.