அங்குசம் சேனலில் இணைய

ஆராய்ச்சிபடிப்பு மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆராய்ச்சிபடிப்பு (Ph.D) மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

2024-2025 நிதியாண்டில் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை விரிவுபடுத்தி முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டம் (Chief Minister’s Research Fellowship) ஆராய்ச்சி படிப்பு (Ph.D) மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1,00,000/- வழங்கபடஉள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

முழுநேர அல்லது பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு (Ph.D) பயிலும் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர அல்லது பகுதிநேர ஆராய்ச்சி படிப்புபயில்பவராக இருக்க வேண்டும்.

ரூ.1.00 இலட்சம் ஊக்கத்தொகையானது ஆராய்ச்சி படிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை சமர்பித்தவுடன் இத்தொகை முழுவதுமாக அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர்கள் மூலம் நேரடியாக மாற்றுத்திறனாளி மாணாக்கர்களின் வங்கிக்கணக்கிற்கு ECS மூலம் செலுத்தப்படும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

கல்வி உதவித்தொகை
கல்வி உதவித்தொகை

ஆராய்ச்சிபடிப்புபயிலும் மாணாக்கர்கள் தங்களது விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளி அடையாளஅட்டை, தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை UDID, ஆதார் அட்டைநகல், வங்கிகணக்கு புத்தகநகல், முழுநேரஅல்லது பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயில்வதற்கான உரிய பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்திலிருந்து பெற்ற ஆராய்ச்சிபடிப்புக்கான ஆய்வறிக்கை வாய்மொழி தேர்வு தேதி (Thesis Viva Date) வழங்கப்பட்டதற்கான ஆதாரம் மற்றும் வசிப்பதற்கான இருப்பிடச் சான்று (Nativity Certificate) ஆகிய சான்றுகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி கண்டோண்மென்ட்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்திலோ அல்லது, 0431- 2412590 என்ற அலுவலக தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்துகொள்ளும்படி மாவட்ட  ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார்,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.