சிறப்பு குழந்தைகளுக்கான அதிநவீன பள்ளி கட்டிடம் திறப்பு…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மனவளம் குன்றிய குழந்தைகளுக்கு சிறப்பு கவனம், கல்வி, ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சிறப்பு குழந்தைகளுக்கான அட்சயா பள்ளி மதுரை ரயில்வே காலனியில் 2000 ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 27 சிறப்பு குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கு யோகாசனம், நடை பயிற்சி, உடல் இயக்க பயிற்சி, வாழ்க்கை திறன் பயிற்சி, தொழில் சார் பயிற்சி போன்றவை அளிக்கப்படுகின்றன. இந்தப் பள்ளியை தெற்கு ரயில்வே பெண்கள் நல சங்கத்தின் மதுரை கிளை நடத்தி வருகிறது. இந்தப் பள்ளியில் சிறப்பு குழந்தைகளுக்காக நவீன வசதிகளுடன் 550 சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தெற்கு ரயில்வே பெண்கள் நல சங்க தலைவி பிரியா சரத் ஸ்ரீவத்சவா  திறந்து வைத்தார்.

Sri Kumaran Mini HAll Trichy

Flats in Trichy for Sale

Akshaya School
Akshaya School

இந்த கட்டிடத்தில் கல்வி பயில மற்றும் பயிற்சிகள் எடுக்க விசாலமான குளிர்சாதன வசதியுடன் கூடிய அரங்கு  உள்ளது. அரங்கிற்கு எளிதாக சென்று வர 45 மீட்டர் நீளத்தில் சாய்வுதளப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிட பணியோடு சுவர் சிற்ப ஒப்பனைச் சாந்து பூசப்பட்ட சுற்றுச்சுவர் மற்றும் கண்ணைக் கவரும் வர்ணம் பூசப்பட்ட வகுப்பறைகள் ஆகியவையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் பசுமை பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.