பெருகமணி நீர் கொள்ளை – யார் பொறுப்பு? 

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

பெருகமணியில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை உரிமையான குடிநீர் இன்று கேள்விக்குறியாகி உள்ளது!

​நடப்பது என்ன? 

இந்த வார அங்குசம் வார இதழில்…

பெருகமணியில் உள்ள சில வணிக வளாகங்கள் மற்றும் பெரிய குடியிருப்புகளில், பொது குடிநீர் இணைப்பில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள்  பொருத்தப்பட்டு நீர் உறிஞ்சப்படுவதாகத் தெரிகிறது.

இவர்கள் மோட்டார் போட்டு நீரை உறிஞ்சுவதால், வரிசையில் நிற்கும் கடைநிலை வீடுகளுக்குச் சொட்டு நீர் கூட கிடைப்பதில்லை. உழைக்கும் மக்களின் நீர் ஆதாரம் இங்கே திட்டமிட்டுத் திருடப்படுகிறது!

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

​எங்கள் கோரிக்கைகள்: 

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மெயின் ரோடு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களின் குடிநீர் இணைப்புகளைப் பரிசோதிக்க வேண்டும். முறைகேடாக மோட்டார் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு முறையான நீர் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் நீரின் அளவைக் கட்டுப்படுத்த இதுவே ஒரே வழி.

அளவுக்கு அதிகமாக நீர் பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் பஞ்சாயத்தின் வருவாயைப் பெருக்கி, மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்.

​பஞ்சாயத்து நிர்வாகமே! 

பொதுமக்களுக்குச் சேர வேண்டிய நீரைச் சரியான முறையில் கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை. நீர் திருட்டைத் தடுத்து, எளிய மக்களின் தாகத்தைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.