அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சவாலான இரட்டைக் கர்ப்பம்… பாதுகாப்பான சுகப்பிரசவம்! தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சாதனை !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நான்கு தாய்மார்களுக்கு இயற்கை சுகப்பிரசவம் (Normal Vaginal Delivery) மூலம் இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களும் குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

​​இரட்டைக் கர்ப்பம் என்பது தாய் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதல் கண்காணிப்பும், சிறப்பு மருத்துவக் கவனமும் தேவைப்படும் ஒரு சவாலான நிலையாகும். இந்நிலையில், அனுபவமிக்க மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினரின் ஒருங்கிணைந்த தீவிர கண்காணிப்பில் அனைத்துப் பிரசவங்களும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்பட்டன.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

​தாய்மார்களின் உடல்நிலை மற்றும் கருவில் உள்ள குழந்தைகளின் நலன், பிரசவத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு, இயற்கை சுகப்பிரசவம் மூலம் பாதுகாப்பாகப் பிரசவம் பார்க்கப்பட்டது. பிரசவத்திற்குப் பிறகும் தாய்மார்களும் குழந்தைகளும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, நல்ல உடல்நலத்துடன் இல்லம் திரும்பினர்.

​​சீனிவாசன் மருத்துவமனைஇந்த வெற்றிகரமான மருத்துவச் சாதனை குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில்:

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

​”ஒவ்வொரு கர்ப்பிணித் தாய்க்கும் பாதுகாப்பான, தரமான மற்றும் அன்பான மகப்பேறு சேவையை வழங்குவதே மருத்துவமனையின் முதன்மை நோக்கமாகும். தாய் மற்றும் சேயின் நலனே எங்களின் முதன்மையான முன்னுரிமை.”

​மேலும், தங்களின் மீது முழு நம்பிக்கை வைத்து சிகிச்சை பெற்றுச் சென்ற குடும்பத்தினருக்கு மருத்துவமனை நிர்வாகம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.

​“ஆரோக்கியமான தாய் • ஆரோக்கியமான குழந்தை • மகிழ்ச்சியான குடும்பம்” என்ற உன்னத நோக்கத்துடன் மகப்பேறு சேவைகள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் வழங்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஒரே வாரத்தில் நான்கு தாய்மார்களுக்கு இயற்கை சுகப்பிரசவம் (Normal Vaginal Delivery) மூலம் இரட்டைக் குழந்தைகள் வெற்றிகரமாகப் பிறந்துள்ளன. பிரசவத்திற்குப் பின்னர் தாய்மார்களும் குழந்தைகளும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.