தூங்கும் மின்சார வாரியம்! தூங்காத பொதுமக்கள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  செங்கிப்பட்டியில் மின்சார வாரியத்தின் கீழ் புங்கனூர், சின்னகாங்கேயம்பட்டி, பெரியகாங்கேயம்பட்டி, காம தேவ மங்கலம், விண்ணனூர்பட்டி போன்ற கிராமங்கள் வருகின்றன. மேற்படி ஊர்களில் பல நூற்றுக்கணக்காண மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளியூர்களில் வேலைப் பார்த்து வரும் நிலையில் காலையில் வேலைக்கு சென்று  மாலையில் வீடு  வந்து இரவு மட்டும் தூங்கும் நிலையில், சமீப காலங்களாக இப்பகுதிகளில் மின்விநியோகத்தில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக ஃபேன்,  பிரிட்ஜ், AC  போன்ற மின் சாதனங்கள் இயங்குவதில் மிகவும் சிரமம் உள்ளதால் இரவினில் பொதுமக்கள் தூங்காத முடியாத நிலை உள்ளது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மேலும் பல மின்சார சதானங்கள் குறைந்த மின் அழுத்தத்தால் பழுது அடையும் நிலையில் உள்ளது. ஆகவே தமிழ்நாடு மின் வாரியத்தின் செங்கிப்பட்டி மின்பிரிவு இனியும் தூங்காமல் விழித்துக் கொண்டு செயல்படுமா? என்பதே பொது மக்களின் கேள்வியாக உள்ளது. புதிதாக பொறுப்பேற்று சிறப்பாக செயல்படும் தஞ்சாவூர் மின்சார வாரிய மேற்பார்வைப் பொறியாளர் கவனத்திற்கு இச்செய்தி எட்ட வேண்டும் என்பதே நம்முள் உள்ள பலரது நோக்கமாக உள்ளது.

—  தஞ்சை. க. நடராசன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.