அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

16 வயது பள்ளி மாணவனுடன் 26 வயது டீச்சர் காதல் ! நிச்சயதார்த்தம் ? தற்கொலை ! போக்சோவில் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

 

16 வயது பள்ளி மாணவனுடன் 26 வயது டீச்சர் காதல் ! நிச்சயதார்த்தம் ? தற்கொலை ! போக்சோவில் கைது !

 

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

16 வயது பள்ளி மாணவனுடன் 26 வயது டீச்சர் காதல் ! டீச்சருக்கு நிச்சயமானதால் மாணவன் தற்கொலை – போக்சோவில் கைது !

அம்பத்தூரில் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேர சென்ற மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

Admission Enquiry Form

காதல் வலையில் வீழ்த்தி தற்கொலைக்கு தூண்டியதாக மாணவனின் பிளஸ் 2 டீச்சர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அடுத்த அம்பத்தூரை சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர் 2021-22ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு முடித்துள்ளார்.

பின்னர் சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி அந்த மாணவர் தனது நண்பர்களுடன் சென்னை மாநில கல்லூரிக்கு கலந்தாய்வுக்காக சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டின் படுக்கை அறைக்கு சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அறைக்குள் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி சென்று காப்பாற்றி அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் உயிரிழந்துவிட்டார்.

16 வயது பள்ளி மாணவனுடன் 26 வயது டீச்சர் காதல் ! நிச்சயதார்த்தம் ? தற்கொலை ! போக்சோவில் கைது !

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற அம்பத்தூர் போலீசார் மாணவன் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மாணவன் திடீரென தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவன் பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த போது அப்பள்ளியில் மாணவனுக்கு பாடம் நடத்திய சர்மிளா ஆசிரியையுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் நிறைய இருந்துள்ளது.

மேலும் அவர்கள் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசியதும் தெரிய வந்தது.

இதையடுத்து அந்த ஆசிரியையுடன் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான சர்மிளா. திருமணம் ஆகாத இவர் மாணவன் படித்த தனியார் பள்ளியில் டீச்சராக பணியாற்றி வந்துள்ளார்.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு சர்மிளா பாடம் நடத்தி வந்துள்ளார். மாலை நேரத்தில் தனது வீட்டில் தனியாக டியூசனுக்கு எடுத்து வந்துள்ளார்.

அங்கு அந்த பள்ளியில் படித்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் படித்து வந்துள்ளனர். அவரிடம் தற்கொலை செய்து கொண்ட மாணவரும் படித்து வந்துள்ளார்.

அந்த மாணவிக்கு கூடுதல் அக்கறையுடன் சர்மிளா டீச்சர் பாடம் நடத்தி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்பி எடுப்பது, டியூசன் முடிந்த பிறகும் பேசிக்கொண்டு இருப்பது மாணவன் வீட்டிற்கு சென்ற பிறகும் போனில் பேசுவது என இருந்துள்ளனர்.

இருவருக்கும் இடையிலான பழக்கம் நட்பை தாண்டி காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. மாணவன் கடந்த மார்ச் மாதம் பள்ளி படிப்பை முடித்த நிலையில் ஆசிரியைக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

அதன் பிறகு மாணவனோடு பேசுவதை அந்த ஆசிரியை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் அந்த மாணவனோ ஆசிரியையோடு பேச முயற்சி செய்துள்ளார்.

ஆனால் ஆசிரியை பேச மறுத்ததால் மனம் உடைந்த மாணவன் தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சிறுவன் என்றும் பாராமல் மாணவன் மனதில் காதல் எண்ணத்தை உருவாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக சர்மிளா டீச்சரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களுக்கு இடையிலான பழக்கம் போனிலும் நேரிலும் சந்தித்து பேசும் அளவில் தான் இருந்ததா? அல்லது எல்லை மீறப்பட்டதா? என்பதை அறிய மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 16 வயது மாணவன் 26 வயதான பள்ளி ஆசிரியையிடையேயான காதல் விவகாரத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.