மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 2
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் – பதிவு 2
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களில் கவிதை, சிறுகதை என எழுத்து மட்டுமல்ல. பாட்டு, நடனம், வீணை வாசிப்பு எனப் பன்முகக் கலைத் திறனுள்ள எழுத்தாளர் கவிஞர் தனலெட்சுமி அவர்கள்.

அம்மா உன் உலகம், சிறு புன்னகையும் ஒரு கையசைப்பும், பறையொலி, என மூன்று நூல்கள் வரை தனலெட்சுமி பாஸ்கரன் என்று வலம் வந்தவர், தமது நான்காவது தொகுப்பான பெருவெளி கடந்த சிறுதுளி தொகுப்பின் மூலம் தனலெட்சுமி என்று சுயத்தோடு பின் ஒட்டின்றி களமிறங்கியுள்ளார்.
எந்தக் கணவனும் தன் இணையர் பெயரைப் பின் ஒட்டாகக் கொண்டிராதபோது நாம் மட்டும் எதற்குச் சுமந்தலைய வேண்டும்? விடுதலைப் பெருவெளி கடந்த கவிஞருக்கு வாழ்த்துகள்

.
மத்திய அரசின் வான்வழித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் தமது எழுத்தாற்றலுக்காக நிறைய விருதுகளும் பரிசுகளும் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். அதைக் கடை விரிக்க இந்தப் பதிவு போதாது. அவ்வளவு இருக்கிறது.

சிறந்த கவிஞர், சிறுகதையாளர், எழுத்தாளர் என்கிற நிலை கடந்து… சிறந்த படைப்பாளுமையாகப் பரிமாணம் பெற நமது வாழ்த்துகளை வழங்குவோம்.
– பாட்டாளி