திருச்சிராப்பள்ளி – சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கலை பண்பாட்டுத் துறை,திருச்சிராப்பள்ளி மண்டலம் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை,பரதநாட்டியம்,ஓவியம்,கிராமிய நடனம்) எதிர்வரும் 17.11.2024 அன்று காலை திருச்சிராப்பள்ளி மாவட்டம், அண்ணாசிலை அருகில்  ஈ.ஆர்.  மேல் நிலைப்பள்ளியில்  நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப்பிரிவுகளில் மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும்,குரலிசை,பரதநாட்டியம்,ஓவியம் மற்றும் கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடத்திடவும், இக்கலைப் போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம்,மற்றும் மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

மேலும், இப்போட்டிகளில் 9-12, 13-16 ஆகிய வயதுப்பிரிவுகளில் முதலிடம் பெற்றவர்களை மாநில அளவிலான கலைப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

போட்டிகளின் விதிமுறைகள்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

01.பரதநாட்டியம் (செவ்வியல் கலை)

பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம்.  முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும்.  திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடலகளுக்கான திரைப்பட நடனங்கள், நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை.

கலைப் போட்டிகள் பக்கவாத்தியங்களையோ, ஒலிநாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.  இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும்.  அதிகபட்சமாக 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும்.

02.கிராமியநடனம் (நாட்டுப்புறக் கலை)

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

கலைப் போட்டிகள் தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம்.   முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும்.  திரைப்படப் பாடலகளுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை பக்கவாத்தியங்களையோ, ஒலிநாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.  இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும். அதிகபட்சம்  5   நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும்.

03.குரலிசைப் போட்டி

கலைப் போட்டிகள் கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சிப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடவேண்டும்.  பக்கவாத்தியக் கருவிகளை பாடுபவர்கள் ஏற்பாடு செய்துக்கொள்ளலாம்.   மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள், குழுப்பாடல்கள் அனுமதியில்லை.  அதிகபட்சமாக 5 நிமிடங்கள் பாடலாம். ஒலிபெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது.

04.ஓவியப் போட்டி

40ஒ30 செ.மீ. அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும்.  பென்சீல், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம்.  ஓவியத் தாள் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல்  வேண்டும்.

குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை.  ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.  இப்போட்டிகளில் வெற்றி பெரும் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கலைப் போட்டிகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட அளவில் நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் வருகின்ற 17.11.2024 அன்று காலை 9.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டம்,அண்ணாசிலை அருகில் ஈ.ஆர்.மேல் நிலைப்பள்ளிக்கு ஆதார் அட்டை  நகலுடன் நேரில் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விபரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் (செல்நம்பர் 9486917336,0431-2434122)ல் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.