திருச்சபைக்குள் சிக்கிய ரகசிய கேமரா… பெண்களை ஆழம் பார்த்த போதகர்கள் கைது !
தஞ்சாவூர் அருகே கிறிஸ்துவ திருச்சபைக்குள் பெண்களை ஆபாச படம் பிடித்த போதகர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதுடைய பெண். இவருக்கு திருமணமாகி 3 வயதான பெண் குழந்தை உள்ளது. தற்போது தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் தனது மனக்குழப்பங்களிலிருந்து விலக கிறிஸ்துவ சபைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். ஆனால், ஒருகட்டத்தில் அங்குள்ள போதகர்களே சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பந்தநல்லூர் போலீஸார் 6 பேர் மீது வழக்குப்பதிந்து 5 பேரை மட்டும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் எனது கணவரைப் பிரிந்து மூன்று வயது பெண் குழந்தையுடன் எனது அம்மா வீட்டில், இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் எங்களது ஏழ்மை நிலையைக் கண்டு ஆரலூரில் உள்ள ‘கிருஸ்துவுக்குள் மறுபிறப்பு ஊழியங்கள் சபை’யில் இருந்து வந்து “சபைக்கு வாருங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம்” என்று அங்கிருந்த ஊழியர்கள் மூலம் எங்களது கூரை வீட்டிற்கு கீற்றுபோட்டு கொடுத்தார்கள்.

எனக்கு இருந்த குடும்ப பிரச்சனைகள், மன உளைச்சல் காரணமாக நானும் சர்ச்சிக்கு சென்றால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று ஒரு வருடமாக ஆரலூரில் உள்ள சபைக்கு சென்றுக் கொண்டிருந்தேன். சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்தின் தலைமை போதகர் சாம்ராஜ் அமெரிக்காவில் இருந்து என்னைத் தொடர்புகொண்டு ஆறுதலாகப் பேசினார். பின்பு தொடர்ந்து போன் செய்ய ஆரம்பித்து என்னிடம் எல்லை மீறி ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேச துவங்கினார்.
என் நிர்வாணப் படத்தை வாட்சப்பில் அனுப்ப சொன்னார். நான் இதுபோல என்னிடம் பேச வேண்டாம் என்று பேசுவதைத் தவிர்த்து வந்தேன். அதன் பிறகு இவர் அந்த ஊழியத்தில் இருக்கக்கூடிய முக்கிய பெண் ஊழியர்கள் பொறுப்பாளர்களின் நிர்வாணப் படங்களை வாட்சப்பில் எனக்கு அனுப்பி எனக்கு “இவர்கள் யாரையும் பிடிக்கவில்லை. உன்னை மட்டும்தான் எனக்கு பிடித்திருக்கிறது. நான் 29ஆம் தேதி ஊருக்கு வருகிறேன் சொல் ”ரூம்” போடலாம்” என்று என்னை தொடர்ந்து தொலைபேசியில் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் ஆபாசமாக சாட்டிங் செய்வதும் ஆபாச வீடியோக்களை அனுப்பி “இது எப்படி இருக்கு. உன்னை நான் இப்படியெல்லாம் செய்யவா” என்றும் கேட்டு தொல்லை செய்தார்.
சாம்ராஜ் அனுப்பிய நிர்வாணப் புகைப்படங்களில் ஆரலூர் சபை போதகர் சிவக்குமார் மனைவியின் புகைப்படமும் அடங்கும். மேற்படி சிவக்குமார் மனைவி நிர்வாணப் புகைப்படம் என்னிடம் அனுப்பியதைப் பற்றி தலைமைப் போதகர் சாம்ராஜ், உதவி போதகர் சிவக்குமாரிடம் கூறியுள்ளார். மறுநாள் அதிகாலை சுமார் 5 மணியளவில் என் வீட்டுக்கு வந்த உதவி போதகர் சிவக்குமார் “ஏன் இப்படி அடம்புடிக்கிற. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போ வசதி வாய்ப்போட சந்தோஷமா வாழலாம், என்னை எடுத்துக்க என் மனைவியோட சாம்ராஜ் பேசுறது, வீடியோ கால் சேட்டிங் செய்றது. எல்லாம் தெரியும். நான் அட்ஜஸ்ட் பண்ணி போறதுனாலதான் சாம்ராஜ் என் லட்சக்கணக்கான கடனை அடச்சி, என்னையும் என் மனைவியையும் சந்தோஷமா வச்சிருக்காரு” என்று கூறியதோடு என்னை விபசாரத்துக்கு தூண்டும் விதமாக பேசினார். அதற்கு நான் உடன்படவில்லை.
கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு சாம்ராஜ் செய்யும் செயல் எனக்கு பெரிதும் மன உளைச்சலைக் கொடுக்க, தவிர்க்க முடியாத ஒருகட்டத்தில் நான் அந்த சபையின் நிர்வாகியும் பொறுப்பாளருமான விமல்ராஜ் அவர்களிடம் தெரியப்படுத்தினேன். முதலில் அவர் நம்ப மறுத்தார். பின்பு எனக்கு சாம்ராஜ் அனுப்பிய பேசிய அத்தனை வீடியோக்களையும் போட்டோக்களையும் அவரிடம் காட்டியபின்னே நம்பினார்.
சாம்ராஜ் அவர்களின் ஆசை நாயகிகளில் ஒருவராக இருக்க நான் மறுப்பதால் அவர் அனுப்பிய புகைப்படங்கள், சாட்டிங் எல்லாவற்றையும் அழிக்கச் சொல்லி என்னை மிரட்டி வந்தார். குறிப்பாக, ஆரலூர் சபை ஊழியரின் மனைவியின் நிர்வாணப் படத்தை அழிக்கச் சொன்னார். நான் வழக்கம்போல் கடந்த செப் 7ம் தேதி ஞாயிறன்று ஆரலுர் சபைக்கு சென்றேன். சிவக்குமார் மனைவி என்னை அழைத்து “சாம்ராஜ் அண்ணன் ஊருக்கு வரும்போது 3 பவுன் செயின் எனக்கு எடுத்துட்டு வரதா சொல்லியிருக்காரு. வேணும்னா உனக்கும் அதுபோல செயின் எடுத்துட்டு வரச் சொல்றேன். அவருக்கூட ஒரு மணி நேரம் (தனிமையில்) இருந்துட்டுப் போ” என்றார். “அண்ணன் கூடத்தான் படுப்பியா? என்று கூறிவிட்டு ஜெபிக்க சென்றுவிட்டேன்.

சபை முடிந்ததும் சிவக்குமார் என்னை அழைத்து “சாம்ராஜ் அண்ணன் உன்னிடம் பேச சொன்னார். என் வீட்டிற்கு வா’ என்று என்னை அழைத்தார். நான் சென்றபோது “சாம்ராஜை பிடிக்கவில்லை என்றால் என்னிடம் பேசு நாம் ஜாலியாக இருப்போம். உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்கிறேன்’ என்று என் கையைப் பிடித்து இழுத்தார். நான் உதறிவிட்டு வெளியே ஓடி விட்டேன்.
அன்று மதியம் சுமார் 1 மணியளவில் வழக்கம்போல் வீட்டிற்கு ஆரலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். வேலூரிலிருந்து கெளுத்தூர் போகும் வழியில், சாம்ராஜ் அவர்கள் வேலூர் காசிநாதன் மகன் செந்தில் மற்றும் அவரது தம்பியையும் அனுப்பி என்னைப் பின்தொடர்ந்து வரச்செய்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் “நில்லுடி தே*டியா” என்று என் கையைப் பிடித்து இழுத்து என் கன்னத்தில் அறைந்து என்னை மானபங்கம்படுத்த முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் நான் ஆதாரமாக வைத்திருக்கும் எனது செல்போனை பலவந்தமாக பிடுங்கவும் முயற்சி செய்தார்கள். திமிறிகொண்டு அவர்களது பிடியிலிருந்து தப்பித்தேன். இது சம்பந்தமாக போலீஸிலோ வேறு யாரிடமாவது சொன்னால் உன் குடும்பத்தையே வீட்டோடு வைத்து கொளுத்தி விடுவேன் என்று சொல்லி மிரட்டி சென்றார்கள்.
இந்நிகழ்வால் நான் மிகவும் பயந்துபோனேன். இந்த விசயத்தை நான் நிர்வாகி விமல்ராஜிடம் தெரிவித்தபோது காவல்துறையில் புகார்கொடுக்க அழைத்தார். நான் பயந்துகொண்டு புகாரளிக்க செல்லவில்லை. மீண்டும் கடந்த 22/09/25 அன்று மதியம் என் குழந்தையை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்துவர சென்றபோது எங்கள் பகுதியில் அறிமுகம் இல்லாத இரண்டு இளைஞர்கள் சாம்ராஜின் தூண்டுதலின் பேரில் பைக்கை நிறுத்தி காத்திருந்தனர். நான் அவர்களை கடந்து செல்ல முயல்கையில் ஒருவன் என் கையைப்பிடித்து கீழே வாய்க்காலுக்குள் இழுக்க, மற்றொருவன் அதை வீடியோ எடுத்தான். என் நைட்டியைப் பிடித்து இழுத்து என்னை கீழே தள்ள முயற்சிக்கையில் நான் அவனது கையை கடித்துவிட்டு வீட்டுக்கு ஓடிவிட்டேன்.
கடந்த 24/09/2025 ஆம் தேதி சாம்ராஜ் அமெரிக்கா சென்ற பிறகும் கூலி படைக்கு பணத்தை கொடுத்து தன் பணபலத்தால் எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுப்பதும், வாட்சப் சாட்டில் மிரட்டுவதும் அடியாட்களை வைத்து என்னைப் பின்தொடர்ந்து மிரட்டுவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
நான் அவர் செய்த கேவலமான விசயங்கள் அனைத்தையும் சாம்ராஜ் மனைவிக்கு தெரியப்படுத்தினேன். அவரும் என் கணவர் அப்படித்தான் செய்வார். நீ அந்த போட்டோவை அழித்துவிடு. இல்லை உனக்கு அழிவு நிச்சயம் என்று மிரட்டும் விதமாக பேசினார். இதனால் என் குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அமைதி காத்து வந்தேன்.
மேற்படி சம்பந்தமாக எனது உயிருக்கோ, உடமைக்கோ, என் குழந்தைக்கோ என்னை சார்ந்தவர்களுக்கோ, எந்தப் பிரச்சனை வந்தாலும் அதற்கு முழு காரணம் சாம்ராஜ் மற்றும் அவரது மனைவி அமுதா ஆரலூர் சபை ஊழியர் சிவக்குமார் அவரது மனைவி சூரியா, வேலூர் செந்தில் அவனது தம்பி விஜய் ஆகிய இவர்களே முழுகாரணம் என்று தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
ஊழியம் என்கிற பெயரில் சபைக்கு வரும் தாழ்த்தப்பட்ட ஏழைப் பெண்களை குறி வைத்து உதவி செய்வதுபோல் நடித்து அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மதமாற்றம் செய்வது மட்டுமல்லாமல் தனது காம இச்சைக்கு பயன்படுத்தும் சாம்ராஜ் மீதும் சாம்ராஜிக்கு உடந்தையாக செயல்படும் மேற்கூறிய சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “சம்பவம் நடந்தது என்பது உண்மைதான். அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தும் நபர்களும், சம்பந்தப்பட்ட பெண்ணை வைத்து சிலர் எங்களது பெயருக்கு அவப்பெயர் உண்டாக்குகின்றனர். எனவே, அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பியிடம் புகார் அளித்தனர். அதன்மூலம் அவர்களது புகாரின் பேரில் போதகர்கள் விமல்ராஜ் மற்றும் செல்வக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரிலும் சாம்ராஜ், சிவக்குமார், செந்தில் மற்றும் விஜய் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சாம்ராஜ் அமெரிக்காவில் இருப்பதால் அவர்மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

மேலும் இதுகுறித்து திருவிடைமருதூர் டிஎஸ்பி ராஜுவிடம் பேசியபோது, “பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கைது நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் அமெரிக்காவில் இருக்கும் போதகர் சாம்ராஜ் எப்போது இந்தியா வருகிறாரோ அப்போது கைது செய்யப்படுவார். மேலும் இதுபோன்று வேறு யாரும் பாதிப்படைந்துள்ளனரா என்று தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
ஜே.கே













Comments are closed, but trackbacks and pingbacks are open.