அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இஸ்லாமிய சிறைவாசிகளை அடித்து சித்ரவதை செய்யும் போலீஸ் – சீமான் ஆவேசம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; குற்றத்தை ஒப்புக்கொள்ளமாறு கைதிகளுக்கு சிறையில் சித்ரவதை மதுரையில்  சீமான் பேட்டி…

விசாரணை கைதிகளாக சிறையிலுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோரின் குடும்பத்தினரை மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசினார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

பின்னர் அவர் அளித்த பேட்டியில்,

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சீமான் பேட்டிமூவரும் விசாரணை சிறைக்கைதிகளாகவே 15 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்கள். அவர்களை இப்போது சிறையில் போலீசார் அடித்து சித்ரவதை செய்கிறார்கள். குடும்பத்தினர் சந்திப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இறக்கும் தருவாயில் உள்ள கைதிகளை கூட விடுதலை செய்யவில்லை. இசுலாமிய மக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என சொல்கிறார்கள். சிறையிலேயே வைத்து பாதுகாப்பீர்களா?

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - MMM TRICHY -

இசுலாமிய தாய்மார்கள் சிந்தும் கண்ணீர் இந்த ஆட்சியை வீழ்த்தும்.

இசுலாமிய சிறை கைதிகளை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்தார் முதல்வர் ஸ்டாலின் ஆனால் இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. உடல்நிலை காரணம் கருதி கைதிகளை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இந்த அரசு விட முடியாது என பதில் மனு தாக்கல் செய்துள்ளது. குற்றத்தை ஒத்துக்கொள்ளுமாறு சிறையில் கைதிகளை அடித்து துன்புறுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இதை கண்டித்து பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்றார்.

 

—  ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.