ஒன்னா நின்னு ஜெயிக்க வச்சிடுங்க … காங்கிரசாரிடம் ஆதரவு கோரிய வேட்பாளர்கள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மற்றும் சந்திப்பு மார்ச்-30 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டணியின் முக்கிய வேட்பாளர்கள் கலந்துகொண்டு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து தங்களது தொகுதிகளுக்கான ஆதரவைத் திரட்டினர்.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி;  திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி திமுகவேட்பாளர்  இனிகோ இருதயராஜ் ; மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்  அப்துல் சமத்  ஆகியோர் பங்கேற்று ஆதரவு திரட்டினர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த சந்திப்பின் போது, மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், காங்கிரஸ் பேரியக்கத்தின் தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் , அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் எல்.ஐ.சி. ஜெயராமன் மற்றும் மாநில மாவட்ட  வட்டார நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்தும், கூட்டணி கட்சிகளின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய களப்பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

–              அங்குசம் செய்திப்பிரிவு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.