Saturday, November 28, 2026 | 1:49 PM IST

கைதான த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ்! அன்று முதல் இன்றுவரை நடந்தது என்ன ?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பிறகு, ஒருவழியாக கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். சர்ச்சைக்குரிய சம்பவம் நடைபெற்றது 2026 – ஜூலை – 31. திமுகவை சேர்ந்த எம்.பி. கனிமொழி வழியே, இந்த சம்பவம் முதன்முதலாக பொதுவெளிக்கு வந்தது நவம்பர் – 09. நடைபெற்ற சம்பவத்தின்படி கணக்கிட்டால், சுளையாக 4 மாதங்கள். விவகாரம் சந்திக்கு வந்த நாளை கணக்கிட்டாலும்கூட, 20 நாட்கள். இன்னும் சொல்லப்போனால், அதிமுகவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஆர். திரிசூலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்குதான், தற்போதைய கைது நடவடிக்கையை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

த.வெ.க.வின் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கூட்டணி கட்சி அமைச்சர் விசிகவை சேர்ந்த வன்னியரசு உள்ளிட்டோரின் கவனத்துக்கு சென்ற நிலையிலும், அவர்களின் வழியே முதல்வரின் கவனத்திற்கு சென்றும்கூட எந்த நடவடிக்கையும் இல்லை என்பது ஒருபுறம். மறுபுறம், சம்பந்தபட்ட பெண் ஆட்சியரின் கணவரின் முயற்சியில் தலைமைசெயலர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் வரையில் புகார் தெரிவித்தும் அவர்களும் கைவிட்டதுதான் துரதிர்ஷ்டம். இன்னும் சொல்லப்போனால், தேர்தல் வெற்றிக்குப் பிறகும்கூட, தேர்தல் பிரச்சார கூட்டம் போலவே த.வெ.க. வின் தலைவர் ஜோசப் விஜய் மேடைதோறும் தீய சக்தி என்று வர்ணித்து வந்த திமுகவின் எம்.பி.யின் வழியாக விசயம் பொது வெளிக்கு வந்து; ”மற்றும் சிலர் கட்சி” என்பதாக வர்ணித்து வந்த அதிமுகவின் பெண் வழக்கறிஞர் தொடுத்த வழக்கின் காரணமாக, த.வெ.க. ஒரு எம்.எல்.ஏ. கணக்கை இழந்து நிற்பது மானக்கேடு.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அருள் விக்னேஷ்
அருள் விக்னேஷ்

சர்ச்சைக்குரிய  சம்பவத்தின் தொடக்கம் முதல் தற்போதைய கைது நடவடிக்கை வரையில் நடந்தது என்ன? சுருக்கமாக பார்ப்போம்.

மே – 2026 : த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற உடனே, மே-29 அன்று தமிழகம் முழுவதும் 30 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் தற்போதைய கைது நடவடிக்கைக்கு காரணமாக அமைந்த பெண் ஆட்சியரும் ஒருவர்.

ஜூலை – 2026 : ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களே ஆன நிலையில், பெண் ஆட்சியருக்கு த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்புகிறார். ஜூலை-31 ஆம் தேதி மதுபோதையில் ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்கும் த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் வந்து செல்கிறார். இந்த இரு சம்பவங்களையும் அப்போதே தலைமை செயலரின் கவனத்திற்கு சம்பந்தபட்ட பெண் ஆட்சியர் கொண்டு செல்கிறார்.

நவம்பர் – 2026 : ஜூலை மாதத்தின் இறுதியில் நடைபெற்ற சம்பவம், மேலிடத்திற்கு தகவல் சொல்லியாச்சு. ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் என மூன்று மாதங்கள் முழுமையாக உருண்டோடிவிட்டது. ஆனாலும், அமைச்சர்கள் தரப்பிலோ, அதிகாரிகள் தரப்பிலோ எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. எப்படியோ, பெண் ஆட்சியரின் உள்ளக்குமுறல் தி.மு.க. எம்.பி. கனிமொழியின் கவனத்தை பெற்று அவர் வழியாக, பொது அரங்கிற்கு அம்பலமான நாள் நவம்பர்-09.

இப்படி ஒரு சர்ச்சை வெளியான அடுத்த நாளே, நவம்பர்-10 அன்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் முற்றிலும் மறுக்கிறார். பேருந்து நிலைய ஊழலை வெளிக்கொண்டு வந்ததால், எதிர்க்கட்சிகள் செய்த சதி என்பதாக, அரதப்பழசான சினிமா டயலாக்கையே அவரும் பேசினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இதனை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சிகள், மகளிர் அமைப்புகள் அடுத்தடுத்து கண்டனங்களை பதிவு செய்தன. த.வெ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் அப்படியெல்லாம் இல்லை. அவர் அப்பாவி என்கிறார்.

இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதி விசாரணை நடத்தக் கோரியது, நவம்பர் 15.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது நவம்பர்-22 ஆம் தேதி. அரசு தரப்பில், இதுவரை அப்படி ஒரு புகாரே வரவில்லை என்று வாதிட்டது. நீதிமன்றம் அனைவரிடம் விளக்கும் கேட்கும்படி, சொன்னதையடுத்து, அடுத்தநாளே நவம்பர்-23 ஆம் தேதி பெண் ஆட்சியர் புகார் அளித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது! எம்எல்ஏ பதவி பறிபோகுமா? மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன? | Will TVK MLA Arul Vignesh Automatically Lose His Seat After ...சம்பந்தபட்ட பெண் ஆட்சியரிடமிருந்து, மாவட்ட எஸ்பி ஷானாஸ் புகாரைப் பெற்றார். அவரது புகாரின் பேரில், நவம்பர் – 24 ஆம் தேதி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் எம்எல்ஏ அருள் விக்னேஷ்-க்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பூர் எஸ்பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாகவும்; ஐ.ஜி. காமினி விசாரணையை மேற்பார்வையிடும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்கள். இருவருமே இதற்கு முன்னர், திருச்சி மாவட்டத்தில் ஒன்றாக பணியாற்றி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. நவம்பர் – 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளில் எஸ்.பி. சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் பெண் ஆட்சியிரிடம் விசாரணையை நடத்தினர். நீதிபதி முன்னிலையில் பெண் ஆட்சியர் வாக்குமூலமும் அளித்தார்.

நிறைவாக, நவம்பர்-27 ஆம் தேதி மாலை கள்ளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அருள் விக்னேஷ், எஸ்.பி. சிருஷ்டி சிங் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ததாக அறிவித்தார்கள்.

–              அங்குசம் செய்திப்பிரிவு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.