செல்வத்துள் செல்வம்: முரசொலி செல்வம் – மறைந்தார்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ரசியல் சட்டத்தின் 356வது பிரிவின் இரண்டாம் பகுதியான otherwise என்பதைப் பயன்படுத்தி, ஆளுநரின் ஒப்புதல் கையெழுத்து இல்லாமலேயே ஒரு மாநில ஆட்சியைக் கலைத்து ஜனநாயகப் படுகொலை நிகழ்ந்தது என்றால் அது 1991 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்தான். கலைக்கப்பட்டது, தமிழ்நாட்டில் இருந்த தி.மு.க. ஆட்சி. கலைக்கச் சொன்னவர் ஜெயலலிதா. கலைத்தவர் பிரதமர் சந்திரசேகர். இருட்டிய பிறகு அறிவிப்பு வெளியானது.

ஆட்சிக்கலைப்பு அறிவிப்பைக் காலையிலிருந்தே எதிர்பார்த்திருந்த கலைஞர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார். முரசொலி மாறன் எம்.பி. டெல்லியிலிருந்து அங்குள்ள சூழல்களை விவரித்துக் கொண்டிருக்கிறார். இரவு 10.30 மணி.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

 முரசொலி செல்வம்
முரசொலி செல்வம்

முரசொலி அலுவலகத்தின் ஆசிரியர் குழு, செய்தியை எந்த முறையில் வெளியிடுவது, என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், பிரிமியர் பத்மினி கார் வருகிறது. அதில் வந்தவர், ஆசிரியர் முரசொலி செல்வம்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

அடுத்த சில நிமிடங்களில், செய்தி- அதற்கான தலைப்பு- முதன்மைச் செய்தியை ஒட்டிய பெட்டிச் செய்திகள் என அனைத்தையும் விறுவிறுவென எழுதி முடித்து, எதை எந்தப் பக்கத்தில் போட வேண்டும் என்றும் விளக்கிவிட்டுப் புறப்படுகிறார். ‘ஜனநாயகப் படுகொலை’ என்பதுதான் தலைப்பு.

கலைஞர் அங்கே இருந்திருந்தால், முரசொலி மாறனும் வந்திருந்தால் என்ன தலைப்பு வைப்பார்களோ, எப்படி செய்தியைக் கொடுப்பார்களோ அதனை அவர்கள் இல்லாத சூழலிலும் அப்படியே பிரதிபலிக்கக் கூடியவர்தான் முரசொலி செல்வம். எத்தகைய நெருக்கடியான நேரத்திலும் அமைதியான அணுகுமுறையுடன் ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடியவர்.

ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட 1991 மே 22 அன்று நள்ளிரவில், அரசியல் காழ்ப்புணர்வுடன் முரசொலி அலுவலகம் தாக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகிறது. வாகனங்கள், ஆவணங்கள், அச்சுக் காகிதங்கள், அச்சகம் எல்லாம் எரிந்து கருகிய நிலையில், மறுநாளே முரசொலி நாளிதழ் அச்சிடப்பட்டு வாசகர்களின் கைகளில் சேர்ந்தது. அப்போது முரசொலி செல்வம் வைத்த தலைப்பு Murasoli will take it.  இரண்டாம் உலகப் போரில் லண்டன் நகரின் மீது ஹிட்லரின் நாஜிப் படைகள்  குண்டு வீசி நிலைகுலைய வைத்தபோது, மீண்டெழுவோம் என்ற நம்பிக்கையுடன் London will take it என்று இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் சொன்ன வார்த்தைகள் அவை. முரசொலியும் மறுநாளே மீண்டெழுந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஜெயலலிதா ஆட்சியில் முரசொலி மீதான உரிமை மீறல் பிரச்சினையால் சபாநாயகர் உத்தரவின்படி சட்டமன்றத்தில் ஆஜரானார் முரசொலி செல்வம். அவரை விசாரிப்பதற்காகவே சட்டமன்றத்தில் ஒரு கூண்டு வைக்கப்பட்டது. அவர் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், துணிந்து வாதாடி, அடக்குமுறைக் கூண்டைத் தகர்த்து கருத்துரிமை சிறகை விரித்தார். முரசொலி செல்வத்தின் துணிச்சலைப் பாராட்டி, ‘கூண்டு கண்டேன்- குதூகலம் கொண்டேன்’ என்ற தலைப்பில் உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதினார் கலைஞர்.

 முரசொலி செல்வம் கலைஞரின் அக்கா மகன், முரசொலி மாறனின் தம்பி, கலைஞர் மகள் செல்வியின் கணவர் என்ற குடும்ப உறவின் பின்னணியையும் தாண்டி கழகத்தின் அறிவார்ந்த சொத்தாகத் திகழ்ந்தவர் முரசொலி செல்வம். 80 ஆண்டுகளைக் கடந்த முரசொலி தனது பயணத்தில் எதிர்கொண்ட நெருக்கடிகளை, தாக்குதல்களை, கைது நடவடிக்கைகளை தொகுத்து ‘முரசொலி-சில நினைவுகள்’ என எழுதினார். இதழியல் துறையில் துணிவுடன் செயல்பட ஆர்வமுள்ளவர்களுக்கு அது மிகச் சிறந்த கையேடு.

சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். கலைஞரின் எழுத்தில் பொதிந்திருக்கும் எள்ளல் நடையை உரிமையுடன் பெற்றுக்கொண்டு, தன் பாணியிலான கட்டுரைகளை வழங்கியவர் அவர். அக்டோபர் 8ஆம் தேதியன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை நையாண்டியால் நையப்புடைத்து கட்டுரை எழுதியிருந்தார். இன்று அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று ஓய்வெடுத்தவர் நிரந்தர ஓய்வுக்குள்ளாகிவிட்டார்.

 முரசொலி செல்வம்
முரசொலி செல்வம்

82 வயதிலும் கொள்கை உறுதிமிக்க பத்திரிகையாளராக செயல்பட்டதுடன், சமூக வலைத்தளங்களில் இளையவர்கள் வெளிப்படுத்தும் கருத்துகளையும் உற்று கவனித்து, அவற்றை முரசொலியில் வெளியிடச் செய்து ஊக்கப்படுத்தியவர். 50 ஆண்டுகால அரசியல் நிகழ்வுகள் குறித்த சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் உடனடியாகத் தெளிவுபடுத்தக் கூடியவர். தேர்தல் களத்தைத் துல்லியமாக உணர்ந்து, முடிவுகளை முன்கூட்டியே கணிக்கக்கூடியவர். சாதக-பாதகங்களை மீறி கழகத்தின் கொள்கைப் பயணம் தொடர்ந்திட உரிய ஆலோசனைகள் வழங்கி தலைமைக்கும் இயக்கத்திற்கும் பாலமாகத் திகழ்ந்தவர்.

இத்தனை ஆற்றல்கள் நிறைந்தபோதும், எப்போதும் அமைதியானவர் முரசொலி செல்வம்.  இப்போதும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.

 

 — கோவி.லெனின்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.