கலகலப்பானவர், கலகக்காரர், மூத்த வழக்குரைஞர் போஜக்குமார் இறுதி விடைபெற்றார்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கலகலப்பானவர், கலகக்காரர், மூத்த வழக்குரைஞர் போஜக்குமார் இறுதி விடைபெற்றார்!

திருச்சியை சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கோ.போஜக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக 08.12.202 அன்று இயற்கை எய்தினார். திருச்சி, ஜாபர்ஷா தெருவில் வைர வியாபாரிக்கு மகனாகப் பிறந்து சட்டம் பயின்று வழக்குரைஞராக ஆனவர், தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டு உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த வழக்குரைஞர்களுள் குறிப்பிடத்தக்கவர் போஜக்குமார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

மூத்த வழக்குரைஞர் போஜக்குமார்
மூத்த வழக்குரைஞர் போஜக்குமார்

”நக்சல்பாரி” வழிவந்த வாரிசுகள் என்று பகிரங்கமாக அறிவித்து இயங்கிய மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட புரட்சிகர அமைப்புத் தோழர்களின் சட்டப்பூர்வமான அரணாக துணிச்சலோடு முன்னின்றவர் வழக்குரைஞர் போஜக்குமார். தற்போது, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் என்ற பெயரில் இயங்கிவரும் அமைப்பின் ஆதி தாயான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பிதாமகன் வழக்குரைஞர் போஜக்குமார். உரிமைக்காக போராடுபவர்களை சமூக விரோதிகளைப்போல கையாண்ட காவல் துறையினரை, நீதிமன்றக் கூண்டில் ஏற்றி அவர்களது காக்கிச்சீருடை நனையுமளவுக்கு கேள்விகளால் திணறடித்தவர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

ரவுடிகளையும் சமூகவிரோதிகளையும் கையாளுவதைப் போல அல்லாமல், மக்கள் பக்கம் நின்று அவர்களது உரிமைக்காகப் போராடுபவர்களை அரசியல் ரீதியாக கையாள வேண்டுமென்பதற்காக நிறைய மெனக்கெட்டவர். ”இவர்கள் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இல்லை. நியாயத்திற்காக போராடுகிறார்கள். இவர்கள் அரசியல் கைதிகள்.” என்று நீதிபதிகளுக்கே சட்ட வகுப்புகள் பல எடுத்தவர்.

உடல்சார்ந்து ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இயங்கியவர். மருந்து மாத்திரைகளுக்கும் உணவு கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்படாதவர். கடைசியில், உடல்நலக்குறைவே அவர் இறப்புக்கு காரணமாகியிருக்கிறது. உழைக்கும் மக்களின் உரிமைக்காக, அரசியல் உரிமைக்காக களமாடிய களப்போராளியாய் கடைசிவரை வாழ்ந்து மறைந்திருக்கிறார், வழக்குரைஞர் போஜக்குமார்.

நூற்றுக்கணக்கில் திரண்ட தோழர்களும் வழக்கறிஞர் களும் கூடவே ஆட்டோக்களும் அணிவகுக்க; முழக்கங் களோடு செங்கொடிகளை ஏந்தியபடியே; மூன்று கிலோ மீட்டர் தூரம் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம், அவர் எப்போதும் விரும்பும்படியான ஓர் அரசியல் பேரணியாகவே அமைந்தது, அவரது இறுதி பயணம்.

– இளங்கதிர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.