விக்ரம் பிரபு & எல்.கே. அக்ஷய் குமார்- ன் ‘சிறை’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள ‘சிறை’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்.
‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
விக்ரம் பிரபு ஜோடியாக நடிகை அனந்தா நடித்துள்ளார் .இப்படத்தில் தயாரிப்பாளர் லலித் குமார் மகன் எல்.கே. அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா நடித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசை: ஜஸ்டின் பிரபாகர், ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், எடிட்டிங்: பிலோமின் ராஜ் ஸ்டண்ட்: பிரபு, நிர்வாக தயாரிப்பாளர்கள் : அருண் & மணிகண்டன், பி.ஆர்.ஓ. யுவராஜ்
‘சிறை’ படப்பிடிப்பு சென்னை, வேலூர், சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் ரிலீஸ் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
— மதுரை மாறன்