அங்குசம் சேனலில் இணைய

ஒரு தொப்பி செய்து பார்ப்போமா ?

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அனுபவத்துளிகள்!

ஒரு சாதாரண மாலை நேரம்… ஆனால் என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் ஆரம்பமான நாள். சந்தேகத்தோட தொடங்கிய ஒரு குரோசே பணி, எனக்கே ஆச்சரியம் கொடுத்த ஒரு பயணமாக மாறியது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஒரு காலை பொழுது வீட்டு வேலைகள் முடித்து ஓய்வு எடுக்கும் நேரத்தில் கையில் ஒரு நூல், ஒரு ஹூக் எடுத்தேன். “ஒரு தொப்பி செய்து பார்ப்போமா? முடியுமா? அழகா வருமா?” என்ற சந்தேகம் மனதில் ஓடியது. நூல் விரல்களில் சுழன்று, ஒவ்வொரு வரிசையாக உயிர் பெற்று, மெதுவாக ஒரு தொப்பி உருவாகிக் கொண்டிருந்தது. இரண்டு நாட்கள் ஆனது முழுவதுமாக செய்து முடிக்க… முடித்த பின் அதை பார்ப்பதற்கே எனக்கு ஒரு சின்ன பெருமை வந்தது.

ஆனா உடனே ஒரு கேள்வி – “இதைக் காட்சிப்படுத்தணுமா? இல்ல ரகசியமா வைத்துக்கணுமா?”

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Perfect ஆக இருக்கா.. பல எண்ணங்கள்.

சில நிமிடம் யோசித்து, தைரியமா அந்த தொப்பி புகைப்படத்தை மாலை நேரத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் போட்டுட்டேன்.

அதைப் போட்ட உடனே மனசில் பதட்டம் – “யாராவது சிரிச்சா? யாராவது கிண்டல் பண்ணிட்டாங்கனா?” என்ற கலக்கமும் இருந்தது. ஆனால் சில மணி நேரத்துக்குள்ளே, என் போன் முழுக்க likes, hearts, appreciations குவிந்து விட்டது.

“சூப்பரா இருக்கு”, “அழகா செய்திருக்கீங்க”, “ரொம்ப நீட்டா இருக்கு” என்ற வார்த்தைகள் என் மனசுக்குள் ஒரு புது ஒளியை ஏற்றின.

தொப்பி செய்து பார்ப்போம்அந்த பாராட்டுகள் எல்லாம் என்னை வியப்பிலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தின. நான் சின்ன சின்னக் கட்டுகளைக் கைத்தோடு போட்டிருந்தேன், ஆனால் அந்தச் சிறிய முயற்சியில் ஆதரவும், அன்பும், பாராட்டும் கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

ஆனால் அதைவிட எனக்குப் பெரிய ஆச்சரியம் கொடுத்தது – ஒரு unexpected message.

ஒரு நண்பர் எழுதினார்:

“இந்த தொப்பி விற்பனைக்கா?? ,, என்ன விலை?? .”

அந்த மெசேஜை பார்த்த தருணம் என் மனதில் உற்சாகம். என் மனசுக்குள் வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சி ஊர்ந்தது. அது பணம் கொடுக்கிறார்கள் என்று மட்டுமில்ல, என் உழைப்பிற்கு, என் பொறுமைக்கு, என் அன்புக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். அந்தச் சிறிய தொகை என் கையில் வந்த போது அது ஒரு சாதாரண சம்பளம் போல இல்ல. அது என் உழைப்பின் பலன், என் கனவின் தொடக்கம், என் திறமையின் அடையாளம்.

அந்த நாளில் புரிந்தது!

குரோசே என் கைகளின் வேலை மட்டும் இல்ல; அது என் மனசின் மொழி. என் நூல் பேச ஆரம்பித்த நாள், என் வாழ்க்கையில் ஒரு புதிய பயணம் தொடங்கிய நாள். மிக்க மகிழ்ச்சியுடன் விலை நிர்ணயம் செய்து அட்ரஸ் வாங்கி கூரியர் செய்தேன்… இரண்டு நாட்களில் அவருக்கு சேர்ந்தது.. கையில் கிடைத்ததும் ஒரு நல்ல feedback குடுத்தார். ஒரு வாரத்தில் அதே நண்பர் தன் மகளின் தோழி பிறந்தநாள் விழாவிற்கு செல்வதால் ஒரு வாரத்தில் அதே போல் ஒரு தொப்பி செய்து தர முடியுமா என்று கேட்டார்.. மிக அதிக மகிழ்ச்சியுடன் அடுத்த ஆர்டரை ஏற்றுக்கொண்டு செய்து அனுப்பினேன். அந்த இரண்டாவது ஆர்டரை அனுப்பிய பிறகு, என் மனசில் ஒரு சொல்லிக்கொள்ள முடியாத திருப்தி தோன்றியது.

தொப்பி செய்து பார்ப்போம்“என் கைகளால் உருவான ஒரு சிறிய பணி, இன்னொருவரின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கிறது” — இதைவிட பெரிய மகிழ்ச்சி வேறு என்ன இருக்க முடியும்?

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அந்த நாள் முதல், குரோசே எனக்குப் பொழுதுபோக்கு இல்ல.

அது என் ஆத்மாவுடன் பேசும் கலை.

ஒவ்வொரு நாளும் என் உணர்வை தாங்கும் ஒரு கோடு,

ஒவ்வொன்றாக நான் பின்னும் ஒவ்வொரு வரிசையும் என் பொறுமையின் சான்று,

ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய நம்பிக்கையின் தொடக்கம்!

இன்று நான் ஒரு தொப்பி செய்து விற்ற நினைவை நினைத்தால் கூட, என் இதயம் நன்றி உணர்ச்சியால் நிரம்புகிறது. என் கைகளின் உழைப்பை மதித்த அந்த முதல் வாடிக்கையாளர், என் கனவுகளை நம்ப வைத்த முதல் நபர். அந்த ஒரு சிறிய முயற்சி தான் இன்று வரை என் பாதையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கனவு நனவாகும் தருணம் ஒருபோதும் திடீரென வராது; அது நம் உழைப்பிலும் நம்பிக்கையிலும் நெசவாகி, ஒரு நாள் நம் கையில் அழகாய் உயிர் பெறும்.

இதோ இன்று நான்….. ஓடிக்கொண்டே இருக்கிறேன்… ஆனால் யாரை நோக்கி? எதற்காக இந்த ஓட்டம்?

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நான் என்னை தேடிக்கொண்டே ஓடுகிறேன்.

ஒரு ஆசிரியையாக, ஒரு தாயாக, ஒரு கலைஞராக, ஒரு கனவுக்காரியாக — பல பாத்திரங்களில் நான் என்னை பகிர்ந்து விட்டிருக்கிறேன்.

சில நேரங்களில் இந்த ஓட்டம் களைப்பைத் தருகிறது; ஆனால் அதே நேரத்தில் அதுதான் என்னை உயிரோடே வைத்திருக்கிறது.

ஒவ்வொரு முறை நான் குரோசே ஹூக்கை கையில் எடுக்கும்போது, அந்த நூல் என்னை நிறுத்தி வைத்து, “இங்கே உன் மனம் இருக்கிறது” என்று சொல்லும்.

அந்த நிமிடம் நான் வெளி உலகத்திலிருந்து ஓடுவதை நிறுத்தி, எனக்குள் ஓட ஆரம்பிக்கிறேன்.

இந்த ஓட்டம் முடிவில்லாதது.

ஆனால் அந்த ஓட்டத்தில் நான் சிதறவில்லை; மாறாக, ஒவ்வொரு அடியிலும் நான் என்னை புதிதாக உருவாக்கிக்கொள்கிறேன்.

எனக்குள் ஓடும் இந்த ஓட்டம் — வெற்றி நோக்கி அல்ல, அமைதி நோக்கி.

 

   —    மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.