சிவகாசி சிவன் கோவில் தேரோட்டத் திருவிழா பாதியிலேயே நிறுத்தம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அரிகேசரி பராக்கிரமா பாண்டிய மன்னனால் எழுப்பப்பட்ட 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப் பழமையான அருள்மிகு விஸ்வநாத சாமி விசாலாட்சி அம்மன் திருக்கோவிலில் கடந்த மே 27ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் வைகாசி  பிரமோற்ஸவ திருவிழா தொடங்கியது.

சிவகாசி சிவன் கோவில் தேரோட்டத் திருவிழா11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விசுவநாத ஸ்வாமி, விசாலாட்சி அம்மன் ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு , வாகனம் , உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

இத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டத் திருவிழாவில், வழக்கம்போல் தேர் கோவில் எதிரே நிறுத்தப்படுவது நிறுத்தப்பட்டு வந்துள்ளது.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இந்த நிலையில் புதிதாக பொறுப்பேற்றிற்கும் இந்து அறநிலையத்துறை அதிகாரி தேர் கோவிலின் வடக்கு பகுதியில் நிறுத்த வேண்டும் என புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

சிவகாசி சிவன் கோவில் தேரோட்டத் திருவிழாஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர் வழக்கமாக பகுதியிலே இருக்க வேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

இந்த சம்பவத்தால் ஒரு மணி நேரம் தேர் வடக்கு ரத வீதி பகுதியில் பாதியிலேயே நின்றது.

பின்னர் காவல்துறையினர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் சுமூகமாக முடிவு எடுக்கப்பட்டு மீண்டும் பக்தர்களுடன் இணைந்து காவல்துறையினரும் தேரை வடம் பிடித்து இழுத்து வழக்கமாக நிறுத்தும் பகுதியில் தேர் நிறுத்தி வைக்கப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.