தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள்! தெய்வத்தமிழ் பேரவையினர் காவல் நிலையத்தில் புகார் !
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 14ஆம் தேதி குடமுழுக்கையொட்டி நடைபெறும் யாகசாலை பூஜையில் தமிழ் ஓதுவார்களை உயர்நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்க வலியுறுத்திய தெய்வ தமிழ் பேரவை அமைப்பினர் மீது சிவாச்சாரியார்கள் தாக்குதல்.
தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள் மீது தெய்வத்தமிழ் பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் ….
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வருகின்ற 14 ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று மாலை துவங்கியது.
இந்த நிலையில் யாகசாலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி தமிழ் ஓதுவார்களை நியமிக்க வலியுறுத்தி தெய்வதமிழ் பேரவை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் இன்று மாலை தெய்வதமிழ் பேரவையினர் யாகசாலைக்குள் சென்று தமிழ் ஓதுவார்கள் உள்ளனரா.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கூறியபடி பெண் ஓதுவார்கள் உள்ளனரா என பார்க்க முயன்றனர். அப்போது அங்கிருந்த சுப்பிரமணியசுவாமி கோயில் சிவாச்சாரியார்களுக்கும் தெய்வதமிழ் பேரவையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு லேசான் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து தெய்வத்தமிழ் பேரவையின் சத்தியபாமா என்பவர் கீழே தள்ளிவிடப்பட்டார். இது திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலைய காவல்துறையினர் அவர்களை வெளியேற்றினர். பின்னர் தெய்வ தமிழ் பேரவையை சேர்ந்தவர்கள் சிவாச்சாரியார்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து திருப்பரங்குன்றம் கோவில் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்