நடுரோட்டில் தற்காப்பு வித்தை ! சுட்டுக்கொன்ற போலீஸ்!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குர்ப்ரீத் சிங்கை என்ற நபரை நடுரோட்டில் சுட்டுக்கொலை செய்த அமெரிக்க காவல்துறை சம்பவத்தின் போது கையில் வாளை ஏந்தியபடி நடுரோட்டில் நின்று கட்கா எனப்படும் சீக்கியர்களின் தற்காப்பு கலை வித்தைகளை செய்துள்ளார்.
பலமுறை எச்சரிக்கை விடுத்தும், கத்தியுடன் குர்ப்ரீத் தனது காரில் ஏறி தப்பிக்க முயன்று தாறுமாறாக வாகனத்தை ஓட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் போலீசாரின் வாகனத்தின் மீதே தனது காரை மோதியுள்ளார். அப்போது குர்ப்ரீத் கையில் வாளை ஏந்தியபடி போலீசாரை நோக்கி வேகமாக ஓடி வந்துள்ளார்.
இதனையடுத்து, காவலர் ஒருவர் தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், குர்ப்ரீத் சிங் உயிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.