கல்வியின் எதிரிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் ‘சார்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

எஸ்.எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சிராஜ் எஸ். தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல்- சாயாதேவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சார்’. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள,  மீடியாக்கள் முன்னிலையில் சென்னையில் செப்டம்பர் 18 அன்று நடைபெற்றது. படத்தின் சிறப்பு குறித்து பேசியவர்கள்…..

பருத்தி வீரன் சரவணன்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

“நாட்டுக்குத் தேவையான ஒரு அருமையான படிப்பினையை, நல்ல கதையை, போஸ் வெங்கட் படமாக்கியுள்ளார். இப்படத்தை தயாரித்த சிராஜுக்கு நன்றி. நான் இந்தப்படத்தில், நடித்தது எல்லாமே போஸ் சொல்லித்தந்தது தான். படம் மிக நன்றாக வந்துள்ளது. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்”.

இசையமைப்பாளர் சித்து குமார்,

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

“சோஷியல் அவர்னெஸ்ஸோடு இந்த அருமையான படத்தை தந்த போஸ் சாருக்கு நன்றி. அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு நல்ல கருத்தை சொல்கிறார். இந்தப்படத்திலும் ஒரு அருமையான கருத்தை சொல்லியுள்ளார்”.

பாடலாசிரியர் விவேகா,

“இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்த்ததுமே ஒரு மரியாதை வந்து விட்டது.  போஸின் கருத்து வலிமையானது. கன்னிமாடம் படத்தில் ஆணவக்கொலைக்கு எதிராக பேசியவர், இப்படத்தில் சமூகத்திற்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை சொல்லியுள்ளார். சமூகத்திற்கு மிகப்பெரிய கருத்தை தந்துள்ளார் இந்த சார்”.

ஹீரோ விமல்,

“போஸ் மாமாவின் இந்தப்படம் வாகை சூடவா படத்திற்கு பிறகு எனக்கு  நல்ல படமாக அமைந்தது.. இன்று வாழ்த்த வந்துள்ள வெற்றிமாறன் சார், அவர் இந்த படத்திற்குள் வந்த பிறகு தான், இப்படம் முழுமையான சார் ஆகியிருக்கிறது. என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும்  அண்ணன் விஜய் சேதுபதி தான் . அவரால் தான் நான் இப்போது கொஞ்சம் நன்றாக பேச ஆரம்பித்துள்ளேன்.  எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர், படத்திற்கு ஆதரவு தாருங்கள்”.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

விஜய் சேதுபதி,

“இன்று தான் விமல் மிக நன்றாக பேசியிருக்கான்.  இந்தப்படம் அவனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். போஸ் வெங்கட்டை டி.வி சீரியலி ல் நடிக்கும் காலத்திலிருந்து தெரியும். இந்தப்படத்தை மிக அருமையாக எடுத்திருக்கிறார். இந்த காலத்திற்கு தேவையான விசயத்தைப் பேசியிருக்கிறார். படத்தை முழுதாக பார்த்து விட்டேன். கடைசி 40 நிமிடம் படம் உங்களை உலுக்கி விடும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

 போஸ் வெங்கட்,

இதே இடத்தில் கன்னிமாடத்தோடு நின்றேன். இன்று சார் வரை இங்கு வரை கூட்டி வந்தது நீங்கள் தான். சார் படம் உங்களை மகிழ்விக்கும். விஜய் சேதுபதி சாரை கன்னிமாடம் படத்திற்காக அழைக்கப் போனேன், அவர் வேறொரு இயக்குநரோடு பிஸியாக இருந்தார், ஆனால் என்னைப்பார்த்ததும், ஓடோடி வந்தார், என்ன எனக்கேட்டார், விழாவுக்கு வரக் கேட்டேன், அவர் வர்றேன் போய் வாருங்கள் என்றார். இப்போதும் அப்படிதான், நேற்று தான் அழைத்தேன், உடனே வர்றேன் என்றார். இப்படி ஒரு மனிதனா என ஆச்சரியப்படுத்துகிறார், அவருக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது, வேறொரு வார்த்தை தான் கண்டுபிடிக்க வேண்டும். நட்டி அப்பா மருத்துவமனையில் இருக்கிறார், ஆனால்  அவர் நான் கூப்பிட்டவுடன் வருகிறேன் என்றார் நன்றி. இப்படத்திற்கு முதலில் மா. பொ.சி என பெயர் வைத்தேன், பிரச்சனை வந்ததால், சார் தலைப்பை வாங்கித் தந்தது, அம்மா சிவா சார் தான். இப்படத்தை நல்ல படம் என எல்லோரிடமும் சொன்ன தனஞ்செயன் சாருக்கு நன்றி.  நான் கதை சொன்னவுடன், பண்ணுவோம் மாமா என்றார் விமல் .எனக்காக அவ்வளவு கடினமாக உழைத்தார்.  எனக்காக வந்து நடித்து தந்த சரவணன், நடிகை சாயா எல்லோருக்கும் நன்றி. என் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி. என் முதல் பட கதாநாயகன் ஶ்ரீராம் இப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளான். அருமையான இசையைத் தந்துள்ள சித்து குமாருக்கு நன்றி. இப்படம் முடித்து  ரிலீஸ் செய்யத் தயங்கிய போது, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் பார்த்து விட்டு, நான் தான் ரிலீஸ் செய்வேன் என்றார். கோட் படத்திற்கு பிறகு இப்படத்தை ரிலீஸ் செய்கிறார். வெற்றிமாறனிடம் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், உங்கள் பேர் வேண்டும் என்றேன், படம் பார்த்து விட்டு, நல்லாருக்கு நல்ல படம் எடுத்திருக்கிறாய் என்றார், அப்போது தான் உயிர் வந்தது. என் பெயரைப் போட்டுக்கொள் என்றார், நான் வாழ்நாளில் மறக்க கூடாத ரெண்டு பேர் வெற்றிமாறன்  விஜய் சேதுபதி  இருவருக்கும் நன்றி”..

இயக்குநர் வெற்றிமாறன்

“எனக்கு ஏற்புடைய படத்தில் என் பெயர் இருப்பது எனக்குத் தான் பெருமை. என்னால் படத்திற்கு நல்லது என நினைக்கவில்லை. என்னிடம் வரும் படங்களில் சில முரண்பாடு இருந்தாலும், அது இந்த காலகட்டத்திற்கு தேவையானது என்பதாக இருந்தால், அதை செய்கிறேன். நான் வெறும் பெயர் மட்டும் தான் தந்தேன், எதுவும் செய்யவில்லை. ஆனால் எனக்கு இவ்வளவு மரியாதை தந்த குழுவிற்கு நன்றி. இந்தப்படம் மூன்று காலகட்டங்களில் ஆசிரியராக இருப்பவர்களை பற்றி பேசுகிறது. முடிந்த அளவு மிகச்சிறப்பாக அதைச் செய்திருக்கிறார்கள். இந்தப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம். ஒரு விவாதத்தை தொடங்கி வைக்கும். போஸ் என்னை படம் பார்க்க சொன்னார்.பார்த்த பிறகு என் கருத்தை சொன்னேன் அதை மாற்றினார். எல்லாமே போஸ் வெங்கட்டின் முடிவு தான். இந்தப்படத்தின் முழுப்பெயரும் அவருக்குத் தான். நல்ல படம் செய்துள்ளார்கள்.  படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்புகள் சிவா, தனஞ்செயன், நடிகர் நட்டி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

டெக்னீஷியன்கள்– ஒளிப்பதிவு இனியன், எடிட்டிங்  ஶ்ரீஜித் சாரங் , இசை- சித்து குமார்,  கலை இயக்கம் பாரதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.